Published : 27 Nov 2024 12:52 AM
Last Updated : 27 Nov 2024 12:52 AM

கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

மயிலாடு​துறை ​மாவட்​டம் தரங்​கம்​பாடி டேனிஷ் கோட்டை ​முன்​புற​முள்ள பகு​தி​யில் தேங்கி​யிருந்த மழைநீர். படம்: வீ.தமிழன்பன்

நாகை: கனமழை காரணமாக டெல்டா மாவட்​டங்​களில் பொது​மக்​களின் இயல்பு வாழ்க்கை முடங்​கியது.

வங்கக் கடலில் உருவான காற்​றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலை​யில், நாகை, மயிலாடு​துறை, திரு​வாரூர், காரைக்​கால் மாவட்​டங்​களில் நேற்று நாள் முழு​வதும் விட்டு​விட்டு கனமழை பெய்​தது. இதனால் பொது​மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டது. முக்கிய சாலைகள் வாகன நடமாட்​ட​மின்றி வெறிச்​சோடிக் காணப்​பட்டன.

நாகை​யில் பல்வேறு இடங்​களில் குடி​யிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்​துள்ளது. திரு​வாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதி​யில் இளம் நெற்​ப​யிர்​களில் மீண்​டும் மழைநீர் சூழ்ந்​தது. இதனால், வயல்​களில் தேங்​கும் மழைநீரை வடிய​வைக்​கும் பணிகளில் விவசா​யிகள் ஈடுபட்டு வருகின்​றனர். நாகை, வேளாங்​கண்ணி, வேதா​ரண்​யம், தரங்​கம்​பாடி, பூம்​பு​கார் உள்ளிட்ட பகுதி​களில் கடல் சீற்​றத்​துடன் காணப்​படு​கிறது. மீன்​வளத் துறை எச்சரிக்கையை அடுத்து, மீனவர்கள் 5-வது நாளாக நேற்றும் கடலுக்​குள் மீன்​பிடிக்கச் செல்​ல​வில்லை.

தஞ்சாவூர் மாவட்​டத்​தில் நாள் முழு​வதும் பெய்த மழை, சம்பா, தாளடி பயிர்​களுக்கு மிகுந்த பயனாக இருக்​கும் விவசாயிகள் தெரி​வித்​தனர். தொடர் மழை காரணமாக கல்லணைக் கால்​வா​யில் தண்ணீர் திறந்து​விடுவது நிறுத்​தப்​பட்​டு உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x