Last Updated : 26 Nov, 2024 11:07 AM

4  

Published : 26 Nov 2024 11:07 AM
Last Updated : 26 Nov 2024 11:07 AM

எம்ஜிஆர் பாணியில் மீனவ நண்பனாகும் தவெக தலைவர் விஜய்!

யாரைத் தொட்டால் தமிழக அரசியலில் ஜெயிக்க முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து, பாசிச பாஜக, பாயாச திமுக என மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளை கடுமையாக எதிர்த்து வருகிறார் தவெக தலைவர் நடிகர் விஜய். அது​மட்டுமில்லாது பெரும்​பான்​மையாக உள்ள சமுதா​யங்களை தன்னை நோக்கி திருப்பும் முனைப்​பிலும் அவர் ஈடுபட்​டுள்​ளார். அந்த வகையில், தமிழகத்தின் மிகப்​பெரிய வாக்கு வங்கியான மீனவர் சமூகத்தை தங்கள் பக்கம் திருப்பும் வேலைகளை தவெக -​ வினர் கச்சிதமாக செய்து வருகின்​றனர்.

அரசியலுக்கு வரும் முன்பாகவே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த ஸ்னோலின் உள்ளிட்​ட​வர்​களின் குடும்பத்​திற்கு இரவோடு இரவாகச் சென்று ஆறுதல் கூறியவர் விஜய். அண்மையில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருப்​பதைக் கண்டித்து அறிக்கை விட்டார். அத்துடன், தவெக நிர்வாகிகள் கூட்டத்​தில், மீனவர்​களுக்கு பாதிப்பை உண்டாக்கும் நெல்லை மணவாளக்​குறிச்சி அரியவகை மண் ஆலை விரிவாக்​கத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் தொடர்ச்​சியாக, ஸ்னோலின் தாய் உள்ளிட்ட அவரது குடும்பத்​தினர் தவெக-வில் இணைந்​திருக்​கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் தூத்துக்குடி மீனவர்கள் அதிமுக​வுக்கு எதிரான நிலைப்​பாட்டில் இருந்​தனர். கடந்த தேர்தல்​களில் அதை தங்களுக்கான ஆதவு வாக்குகளாக மாற்றிக் கொண்டது திமுக. இந்த வாக்குகளை இப்போது தங்கள் பக்கம் திருப்பும் வேலையில் தவெக இறங்கி இருக்​கிறது.

அதன் தொடக்கம் தான் ஸ்னோலின் குடும்பத்​தினர் தவெக-வில் இணைந்தது என்கிறார்கள். தூத்துக்குடி மாவட்​டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மீனவர் வாக்குகள் இருப்​ப​தாகச் சொல்லப்​படு​கிறது. இதேபோல், மணல் ஆலை விரிவாக்​கத்தில் நெல்லை மீனவர்​களுக்கு ஆதரவாக குரல் கொடுத்​திருப்​பதால் அந்த மாவட்ட மீனவர்​களின் கவனமும் இப்போது விஜய் பக்கம். இதேபோல் நாகை மாவட்​டத்தில் சுமார் ஆயிரத்​துக்கும் மேற்பட்ட மீனவ இளைஞர்கள் மற்றும் பெண்களை நாதக-வில் இருந்து விலக்கி தவெக-வில் இணைத்​திருக்​கிறார் அந்த மாவட்ட தவெக செயலாளர் சுகுமாரன்.

இப்படி மீனவ நண்பனாக உருவெடுக்கும் விஜய், அடுத்ததாக மீனவர் பிரச்​சினை​களுக்காக பெரும் போராட்​டத்தை விரைவில் நடத்த இருப்பதாக கூறுகிறார்கள். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை​யினர் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் சோகமாக உள்ளது. மத்திய - மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தங்களுக்கு உரிய தீர்வைச் சொல்ல​வில்லை என்ற ஆதங்கம் மீனவ மக்களுக்கு இருக்​கிறது.

இந்தப் பிரச்​சினைக்காக மீனவ மக்களை திரட்டி ராமநாத​புரம் அல்லது நாகப்​பட்​டினத்தில் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து மிகப்​பெரிய அளவில் ஆர்ப்​பாட்​டத்தை நடத்த விஜய் தயாராகி வருவதாக தவெக தரப்பில் சொல்கிறார்கள். இதன் மூலம், அதிமுக மற்றும் நாதக-வுக்கு ஆதரவாக இருக்கும் மீனவர் வாக்குகளை தங்கள் பக்கம் கொண்டு வருவதே விஜய்யின் திட்டம். சினிமாவில் மீனவ நண்பனாக, படகோட்​டியாக எம்ஜிஆர் நடித்​ததால் தான் இன்றளவும் மீனவர்கள் அதிமுக அனுதாபிகளாக இருக்​கிறார்கள். அந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட விஜய்​யும் மீனவ நண்​பனாக அவ​தாரம் எடுக்​கிறார். ​பார்க்​கலாம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x