Published : 26 Nov 2024 12:32 AM
Last Updated : 26 Nov 2024 12:32 AM
நாமக்கல்: திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில், ‘அரிசன் காலனி’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அகற்றி, மல்லசமுத்திரம் கிழக்கு என மாற்றக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக் கறிஞர் ஜி.அன்பழகன், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து, ‘அரிசன் காலனி’ என குறிப்பிடப்பட்டி ருந்ததை, ‘ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளி மல்ல சமுத்திரம் கிழக்கு’ என மாற்றம் செய்யும்படி ஆணையம் உத்தர விட்டது. இந்நிலையில், மல்லசமுத் திரம் அரசுப் பள்ளிக்கு நேற்று வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த, ‘அரிசன் காலனி’ என்பதை கருப்பு பெயின்ட் அடித்து அழித்தார்.
தொடர்ந்து, பெயர் மாற்றத் துக்கான அரசாணையைத் தலைமை ஆசிரியரிடம் வழங் கினார். மேலும், இதற்கு நடவடிக்கை மேற்கொண்ட முதியவர் கணேசன், வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோருக்கு, அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
எக்ஸ் தள பதிவு: இதற்கிடையே, ‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT