Published : 25 Nov 2024 06:05 AM
Last Updated : 25 Nov 2024 06:05 AM

அயனாவரம் - பெரம்பூர் சுரங்கப்பாதை பணி - ‘கல்வராயன்’ இயந்திரம் ஜனவரியில் இலக்கை அடையும்: மெட்ரோ ரயில் அதிகாரிகள்

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், மாதவரம் - சிறுசேரி சிப்​காட் வரையிலான 3-வது வழித்​தடத்​தில் ஒரு பகுதி​யாக, அயனாவரத்​தில் இருந்து பெரம்​பூர் நோக்கி "கல்​வ​ராயன்" இயந்​திரம் சுரங்கம் தோண்​டும் பணியில் ஈடுபட்​டுள்​ளது. இந்த இயந்​திரம், வரும் ஜனவரி இறுதி​யில் இலக்கை அடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

28 சுரங்க ரயில் நிலையங்கள் சென்னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், 116.1 கி.மீ. தொலை​வுக்கு 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்​காட் வரையிலான (45.4 கி.மீ.) 3-வது வழித்​தடம் ஒன்றாகும். இதில் 28 சுரங்க மெட்ரோ ரயில் நிலை​யங்​களும், 19 உயர்​மட்ட மெட்ரோ நிலை​யங்​களும் இடம் பெற உள்ளன.

இந்த வழித்​தடத்​தில் அயனாவரம், சேத்​துப்​பட்டு, ராயப்​பேட்டை, அடையாறு உட்பட பல்வேறு இடங்​களில் சுரங்​கப்​பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் ஒரு பகுதி​யாக, அயனாவரம் - பெரம்​பூர் நோக்கி மெட்ரோ ரயில் சுரங்​கப்​பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜனவரி​யில் கல்வ​ராயன் சுரங்கம் தோண்​டும் இயந்​திரம், பெரம்​பூர் மெட்ரோ ரயில் நிலை​யத்தை அடையும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

2-வது சுரங்கம் தோண்​டும் பணி இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறிய​தாவது: அயனாவரம் - பெரம்​பூர் வரையிலான மெட்ரோ ரயில் சுரங்​கப்​பாதை பணியில், `கல்வ​ராயன்' சுரங்கம் தோண்​டும் இயந்​திரம் தற்போது வரை 866 மீட்டர் சுரங்கம் தோண்​டி​யுள்​ளது. பெரம்​பூர் ரயில் நிலைய கட்டு​மானத்​தின் ஒரு பகுதி அமைக்​கும் பணி நடைபெறுகிறது.

இப்பணி முடிந்​த​பிறகு, `கல்வ​ராயன்' இயந்​திரம் வரும் ஜனவரி மாத இறுதிக்​குள் பெரம்​பூர் நிலை​யத்தை அடையும். முதல் சுரங்கம் தோண்​டும் இயந்​திரம் ‘கல்​வ​ராயன்’ பெரம்​பூர் மெட்ரோ ரயில் நிலை​யத்தை அடைந்த பிறகு, இரண்​டாவது சுரங்கம் தோண்​டும் ‘மேல​கிரி’ வேகமெடுக்​கும்.

பெரம்​பூரில் உள்ள புறநகர் ரயில் பாதை​யின் கீழ் சுரங்​கம்​பாதை அமைக்​கும் பணியில் `கல்வ​ராயன்' இயந்​திரம் ஈடுபடுத்​தப்​படும். தெற்கு ரயில்வே விதித்​துள்ள கட்டுப்​பாடு​களின்​படி, இப்பணி நடை​பெறும்​.இந்த பகு​தி​யில் சுரங்​கப்​பாதை அமைக்​கும் ​போது, தீவிரமாக கண்​காணிக்​கப்​படும். இவ்​வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x