Last Updated : 24 Nov, 2024 06:33 PM

1  

Published : 24 Nov 2024 06:33 PM
Last Updated : 24 Nov 2024 06:33 PM

‘வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகள் தேவை’: மதுரை மாநாட்டில் சிபிஎம் தீர்மானம்

மதுரை: இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மதுரையில் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என மதுரை மாநகர மாவட்ட மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை செல்லூர் வைத்தியநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24வது 2 நாள் மாவட்ட மாநாடு நடந்தது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், "கடுமையான விலைவாசியால் மக்களின் வாழ்க்கை நிம்மதியாக இல்லை. தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி யார் கைகளுக்கு போகிறது என்பதை நாம் உணர வேண்டும். கார்ப்பரேட் மற்றும் பெரும் செல்வந்தர்களின் கைகளில் இன்றைக்கு உற்பத்தி போய்க்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் புல்டோசர் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல், தேசிய உரிமை பாதுகாப்பு சட்டம், பொது சிவில் சட்டம் என நாட்டின் பன்முக தன்மையை மாற்றிட முயற்சிகள் நடக்கின்றன. மகாராஷ்டிராவில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அங்கே இன்னும் கூர்மையான எதிர்ப்பு தேவைப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்களே இன்றைக்கு ராணுவம், நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பொறுப்புகளில் இருக்கின்றனர். இதை முறியடிக்க திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறோம். பாஜகவை முறியடிக்க திமுக அவசியம். மறுபுறம் உரிமைகளை உறுதி செய்ய தொடர்ந்து போராடுவோம். யார் பாதிக்கப்பட்டாலும், அங்கு பக்க பலமாக செங்கொடி ஏந்தி நிற்கின்றோம். மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் எம்பி சு.வெங்கடேசனின் பணி சிறப்பாக உள்ளது. மதுரையில் நடைபெறும் அகில இந்திய மாநாடு, இந்தியவை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். இதற்காக ஆயிரம் பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

தீர்மானங்கள்: மதுரையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க, புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். மென்பொருள் கம்பெனிகளை அதிகரிக்க வேண்டும். கல்வி நிலையங்களின் அருகில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும். போதைப் பொருள் விற்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை நகரிலுள்ள 13 கால்வாய்களிலும் கழிவு நீர் கலப்பதை தடுத்து தூர்வார வேண்டும். 6 சதவீத வீட்டு வரி உயர்வையும், குப்பை வரியையையும் ரத்து செய்ய வேண்டும். மதுரையின் வடக்கு பகுதி விரிவடையும் சூழலில் கூடல் நகரில் இரண்டாவது ரயில் நிலைய முனையம் அமைக்க வேண்டும். இனிமேலும், தாமதமின்றி எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

நீண்ட நாளாக நத்தம் புறம்போக்கு, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இடங்களில் வரி வகையறாக்களை செலுத்தி குடியிருக்கும் மக்களுக்கு அவர்களுக்கான இடங்களை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். மதுரை நகரில் மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு வடக்கு பகுதியில் மீனாட்சி மகளிர் கல்லூரி இருப்பது போன்று, தெற்கு பகுதியில் இரு பாலர் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x