Published : 24 Nov 2024 07:54 AM
Last Updated : 24 Nov 2024 07:54 AM
சென்னை: பொறியியல் பணி காரணமாக சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே இன்று முதல் 4 நாட்களுக்கு சில புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி நடப்பதால், மின்சார ரயில் சேவையில் இன்று (நவ.24) முதல் 28-ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நாட்களில் சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே மட்டும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. அதன் விவரம்:
சென்னை கடற்கரையில் இருந்து இன்று முற்பகல் 11.50, நண்பகல் 12.30, 12.50, மதியம் 1.45, இரவு 9.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று மதியம் 1.50, பிற்பகல் 2.25, 3.05, மாலை 4.05, இரவு 11.00 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து நாளை (நவ.25) முதல் 28-ம் தேதி வரை முற்பகல் 11.40, நண்பகல் 12.28, 12.40, மதியம் 1.45, இரவு 9.25 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு நாளை முதல் 28-ம் தேதி வரை மதியம் 1.45, பிற்பகல் 2.20, 3.05, மாலை 4.20, இரவு 11.00 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்: இதற்கிடையே, மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இரு இடங்களிலும் அலுவலர்களை நியமித்து பேருந்து இயக்கத்தை கண்காணிக்கவும், தேவைக்கேற்ப அதிக பேருந்துகளை இயக்கவும் மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT