Published : 24 Nov 2024 03:58 AM
Last Updated : 24 Nov 2024 03:58 AM

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் நவ.29 வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்​கிழக்கு வங்கக் கடல் பகுதி​யில் நேற்று புதிய காற்​றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது இன்று (நவ.24) காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெறக்​கூடும். இதன் காரணமாக நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்​டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு அந்த​மான் கடல் மற்றும் தென்​கிழக்கு வங்கக்​கடல் பகுதி​யில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக, பூமத்திய ரேகை​யையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்​கடல் பகுதி மற்றும் அதையொட்டிய தென்​கிழக்கு வங்கக்​கடல் பகுதி​யில் காற்​றழுத்த தாழ்வு பகுதி உருவாகி​யுள்​ளது.

இது மேற்கு மற்றும் வடமேற்கு திசை​யில் நகர்ந்து, நாளை (நவ.25) தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி​யில் காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெறக்​கூடும். இது அதற்​கடுத்த இரு நாட்​களில் வடமேற்கு திசை​யில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்​கரையை நோக்கி நகரக்​கூடும். இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்​தில் சில இடங்​களி​லும், உள் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். நாளை முதல் வரும் 28-ம் தேதி வரை தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், 29-ம் தேதி சில இடங்​களி​லும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும்.

நாளை தஞ்சாவூர், திரு​வாரூர், நாகை, மயிலாடு​துறை மாவட்​டங்கள் மற்றும் காரைக்​கால் பகுதி​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், கடலூர், அரியலூர், சிவகங்கை புதுக்​கோட்டை, ராமநாத​புரம், தூத்​துக்​குடி, திருநெல்​வேலி மற்றும் கன்னி​யாகுமரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்​யக்​கூடும். வரும் 26-ம் தேதி டெல்டா மாவட்​டங்கள் மற்றும் கடலூர், புதுக்​கோட்டை மாவட்​டங்​கள், காரைக்​கால் பகுதி​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், ராமநாத​புரம் மாவட்​டங்கள் மற்றும் புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்புள்​ளது.

வரும் 27-ம் தேதி விழுப்பு​ரம், கடலூர், திரு​வாரூர், நாகை, மயிலாடு​துறை மாவட்​டங்கள் மற்றும் புதுச்​சேரி, காரைக்​கால் பகுதி​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, சென்னை, திரு​வண்ணா​மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்புள்​ளது. வரும் 28-ம் தேதி காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், கடலூர், மயிலாடு​துறை மாவட்​டங்கள் மற்றும் புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை, திரு​வண்ணா​மலை, சென்னை, கள்ளக்​குறிச்சி, பெரம்​பலூர், அரியலூர், தஞ்சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம் மாவட்​டங்கள் மற்றும் காரைக்​கால் பகுதி​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்​யக்​கூடும்.

வரும் 29-ம் தேதி திரு​வள்​ளூர்,ராணிப்​பேட்டை, காஞ்​சிபுரம், வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்புள்​ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகுதி​களில் லேசான மழை பெய்​யக்​கூடும். நவ. 23-ம்தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதிவான மழை அளவு​களின்படி அதிகபட்​சமாக கோவை மாவட்டம் சின்​கோனா​வில் ஒரு செ.மீ. மழை பதிவாகி​யுள்​ளது. தெற்கு வங்கக்​கடல் பகுதி​களில் உருவாக உள்ள காற்​றழுத்த தாழ்வு மண்டலம் காரண​மாக, மீனவர்கள் ஆழ்கடல் பகுதி​களில் மீன் பிடிப்பதை தவிர்க்​கு​மாறு அறிவுறுத்​தப்​படு​கிறார்​கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x