Published : 24 Nov 2024 01:08 AM
Last Updated : 24 Nov 2024 01:08 AM

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் தலைமை ஆய்வு செய்யும்: செல்வப்பெருந்தகை தகவல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். படம்: ம.பிரபு

சென்னை: ம​காராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து காங்​கிரஸ் தலைமை ஆய்வு மேற்​கொள்​ளும் என்று தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்தகை தெரி​வித்​தார்.

மகாராஷ்டிரா, ஜார்க்​கண்ட் மாநில சட்டப்​பேர​வைத் தேர்​தல்​கள், வயநாடு இடைத்​தேர்தல் பற்றி சென்னை சத்தி​யமூர்த்தி பவனில் தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்தகை செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்​ளது. எங்களது அகில இந்திய காங்​கிரஸ் கமிட்டி பொதுச்​செய​லாளர் பிரி​யங்கா காந்தி 2.5 லட்சம் வாக்​கு​களுக்​கும் அதிக​மாகப் பெற்று முன்னிலை​யில் உள்ளார். அவர் மகத்தான வெற்றி பெறு​வார். மகாராஷ்டிரா​வில் பின்னடைவு ஏற்பட்​டிருக்​கிறது.

முன்​னாள் தேர்தல் ஆணையர் குரேஷி, தேர்தல் பற்றி ஒரு தகவலை சொல்​லி​யிருக்​கிறார். வாக்​குச்​சீட்டு முறை​யில் தேர்தல் வாக்கு சதவீதம் துல்​லிய​மாகத் தெரிந்​து​விடும். ஆனால், மின்னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்கள் மூலம் நடத்​தப்​பட்ட வாக்​குப்​ப​தி​வில், 2 தினங்கள் கழித்து 6 சதவீதம் வாக்​குகள் அதிக​மாகப் பதிவாகி இருப்​ப​தாகத் தெரி​வித்​திருப்பது சந்தேகத்தை கிளப்பு​கிறது. இன்னும் 2 நாட்​களில் இதுகுறித்து ஆய்வு செய்து தெரிவிக்​கப்​படும்.

மகாராஷ்டிரா தோல்வி குறித்து: ஆய்வு செய்​வோம். பாஜக கொடுத்த வாக்​குறு​தி​களில் எதை நிறைவேற்றி இருக்​கிறார்​கள், பெட்​ரோல், டீசல் விலை​யைக் குறைப்​பேன் என்றார்​கள். இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்று​வோம் என தெரி​வித்​தார்​கள். எதையும் செய்ய​வில்லை. அ​தானியை பெரும் பணக்​காரர் ஆக்​கியது​தான் அவர்​களது சாதனை. இவ்​வாறு அவர்​ கூறினார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x