Published : 23 Nov 2024 08:53 AM
Last Updated : 23 Nov 2024 08:53 AM

வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்: மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்​துவக் கல்லூரி​களில் இடம், வேலை வாங்கி தருவதாக சொல்வதை கேட்டு யாரும் ஏமாற வேண்​டாம் என்று சுகா​தாரத் துறை அமைச்சர் மா.சுப்​பிரமணியன் எச்சரித்துள்​ளார்.

சென்னை - சைதாப்​பேட்டை பெண்கள் மேல்​நிலைப்​பள்​ளி​யில் ‘ஊட்​டச்​சத்து உறுதி செய்’ திட்டம் நிகழ்வு நேற்று நடைபெற்​றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்​பிரமணியன் தாய்​மார்​களுக்கு ஊட்டச்​சத்து பெட்​டகங்களை வழங்​கினார். ஒருங்​கிணைந்த குழந்தை வளர்ச்​சித் திட்ட மாவட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, கவுன்​சிலர்கள் த.மோகன்​கு​மார், சுப்​பிரமணி உள்ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்​பிரமணியன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஊட்டச்​சத்தை உறுதி செய் திட்​டத்தை கடந்த 2022-ம் ஆண்டும் அரியலூர் மாவட்​டத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த 15-ம் தேதி அன்றும் முதல்வர் தொடங்கினார்.

இத்திட்​டத்​தின்​படி, தமிழகம் முழு​வதும் உள்ள ஊட்டச்​சத்து குறைபாடு உள்ள குழந்தை​களின் தாய்​மார்கள் 76,705 பேர் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அவர்​களுக்கு ஊட்டச்​சத்து பெட்​டகங்கள் வழங்​கப்​படு​கின்றன. மக்களைத் தேடி மருத்​துவம் திட்டத்தை ஐ.நா. மன்றம் பாராட்டி விருது அறிவித்​தது.

மேலும் விழுப்புரம் மாவட்​டம்​ செல்லும் முதல்வர் 2 கோடியே 1-வது பயனாளிக்கு மக்களைத் தேடி மருத்​துவம் திட்​டத்​தின் கீழ் மருந்து பெட்​டகம் வழங்குகிறார்.

பொது​மக்கள் யாரும் தங்களிடம் மருத்​துவக் கல்லூரி​களில் இடம், வேலை வாங்கித் தருகிறேன், மருத்துவ சிகிச்​சைகளுக்கு உதவி செய்​கிறோம் என்று கூறு​பவர்​களிடம் ஏமாற வேண்​டாம். இந்த அரசு ​முழு​மையாக வெளிப்​படைத் தன்​மை​யுடன் செயல்​படு​கிறது. இடைத்​தரகர்களை நம்பி ஏமாற வேண்​டாம் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x