Published : 23 Nov 2024 06:59 AM
Last Updated : 23 Nov 2024 06:59 AM

கர்னாடக இசை நம் அடையாளமாக இருப்பது பெருமை: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்   

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனின் வருடாந்திர மார்கழி இசை விழாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கி வைத்து ‘கதா கலாஷேபம்’ என்ற நூலை வெளியிட்டார். அருகில் நூலாசிரியர் பிரமிளா குருமூர்த்தி, இசைக் கலைஞர் விசாக ஹரி, பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திரா தலைவர் என்.ரவி, துணைத் தலைவர் நல்லி குப்புசாமி. இயக்குநர் கே.என்.ராமசாமி, துணை இயக்குநர் கே.வெங்கடாச்சலம் ஆகியோர். | படம்: ம.பிரபு |

சென்னை: உலகளவில் போற்றப்படக்கூடிய கர்னாடக இசை நம்முடைய அடையாளமாக இருப்பது நமக்குப் பெருமையாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய வித்யா பவனின் வருடாந்திர மார்கழி இசைத் திருவிழா-2024 தொடக்க நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவைத் தொடங்கி வைத்து ‘கதா கலாஷேபம்’ எனும் நூலை வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: மார்கழி மாதம் இசைக்கும், ஆன்மிகத்துக்கும் உகந்த மாதம். கர்னாடக இசையானது உலகள வில் பாராட்டப்படக்கூடிய ஒன்றாகும். அத்தகைய இசை நமது அடையாளமாக இருப்பது பெருமையாகும்.

ஆன்மிகமும் கலாச்சாரமும்: பாரதம் என்பது ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப் பட்டது. பாரதத்தின் அடையாளம் சனாதனம். ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின்போது நமது கலாச்சாரம், ஆன்மிகம் உட்பட சிலவற்றை அழிக்க முயற் சித்தனர். அப்படி செய்துவிட்டால் அவை வரலாற்றில் இருந்து மறைந்துவிடும் என எண்ணினர்.

ஆனால், அது நிறைவேற வில்லை. நம் பாரதத்தையும், ஆன்மிகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது. பாரதமும், ஆன்மிகமும் இருப்பதனால் தான் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் சிறந்த நாடாக விளங்குகிறது. நம்நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதலில் வந்த ஆட்சியாளர் கள் மதச்சார்பின்மையை பற்றி பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அப்போதைய ஆட்சியாளர்கள் ஐரோப்பிய மதச்சார்பின்மையைத்தான் பின்பற்றினர்.

ஐரோப்பிய கலாச்சாரத்தின் எண்ணங்கள் மற்றும் அதன் வழிகளையே பிரதானமாக நினைத்தனர். அதன் விளைவு, மாநிலங்களின் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகாரிகளின் பொறுப்புகள் அதிகரித்தன. இவற்றை பொதுமக்கள் ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இசை நாட்டிய நிகழ்ச்சிகள்: பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திரா தலைவர் என்.ரவி பேசும்போது, ‘‘சென்னையும் இசையும் பிரிக்க முடியாதது. சென்னையில் உள்ள பாரதிய வித்யா பவன் தனது வளங்களை பயன்படுத்தி இசை மற்றும் கலையைப் பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த 4 வாரங்கள் மற்றும் ஜனவரி மாதத்திலும் ஏராளமான இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இவற்றில் ஏராளமான கலைஞர்கள் பங்கேற்க இருக்கின் றனர். இதற்கான அனுமதி இலவசம்’’என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் பாரதிய வித்யாபவன் சென்னை கேந்திரா துணைத் தலைவர் நல்லி குப்புசாமி, இயக்குநர் கே.என். ராமசாமி, துணை இயக்குநர் கே.வெங்கடாச்சலம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x