Last Updated : 22 Nov, 2024 01:59 AM

9  

Published : 22 Nov 2024 01:59 AM
Last Updated : 22 Nov 2024 01:59 AM

லண்டனில் இருந்து நவ.28-ம் தேதி தமிழகம் திரும்பும் அண்ணாமலையின் அடுத்த திட்டங்கள் என்ன?

சென்னை: லண்டனில் படிப்பை முடித்து​விட்டு தமிழகம் திரும்​பும் அண்ணாமலை பல்வேறு புதிய செயல்​திட்​டங்களை வகுத்​திருப்​ப​தாக​வும், குறிப்பாக 2026 சட்டப்​பேரவை தேர்​தலில் திமுக அரசை வீழ்த்த புது வியூகங்களை அமைத்​திருப்​ப​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்ளது.

ஆக்ஸ்​போர்டு பல்கலைக்​கழகத்​தில் அரசியல் படிப்பை மேற்​கொள்ள ஆக.28-ம் தேதி லண்டன் புறப்​பட்டு சென்​ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, படிப்பை முடித்து​விட்டு, நவ.28-ல் சென்னை திரும்​பு​கிறார்.

அப்போது சென்னை விமான நிலை​யத்​தில் பாஜக​வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து, நவ.29-ம் தேதி சென்னை கமலால​யத்​தில் கட்சி நிர்​வாகிகளை சந்திக்க திட்​ட​மிட்டுள்​ளார். நவ.30 மற்றும் டிச.1-ம் தேதி கோவை கொடிசியா வளாகத்​தில் உள்ள ‘இ’ அரங்​கில் ‘வாய்ஸ் ஆஃப் கோவை’ என்ற அமைப்பு சார்​பில் நடைபெறும் ‘ஏ3 கான்​கிளேவ்’ கருத்​தரங்கு நிகழ்ச்​சி​யில் அண்ணாமலை பங்கேற்​கிறார். லண்டனில் இருந்து திரும்பிய பிறகு அண்ணாமலை பங்கேற்​கும் முதல் நிகழ்ச்​சியாக இந்த நிகழ்ச்சி அமைந்​துள்ளது.

சுவாமி விவே​கானந்​தரின் கோட்​பாடான ‘எழுந்​திரு, விழித்​திரு, உறுதி​யா​யிரு’ என்ற மூன்று கருவை மையமாகக் கொண்டு நடக்​கும் இக்கருத்​தரங்​கில், முதல் நாள் சனாதன தர்மம் குறித்​தும், இரண்​டாவது நாள் அரசியல் சூழல்கள் குறித்​தும், இதில் பங்கேற்​கும் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். இதில் அண்ணா​மலை, மத்திய அமைச்சர் எல்.​முரு​கன், ஹெச்​.ராஜா, அர்ஜூன மூர்த்தி, அர்ஜூன் சம்பத் உட்பட 27 பேர் கலந்து கொண்டு பேசுகின்​றனர். தொடர்ச்​சி​யாக, உறுப்​பினர் சேர்க்கை, அமைப்பு தேர்தல் உட்பட கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்​சிகளில் அண்ணாமலை கவனம் செலுத்த இருக்​கிறார்.

பாஜக அமைப்பு தேர்தல் முடிவுற்ற பிறகு, 2026 சட்டப்​பேரவை தேர்​தலுக்கான பணிகளை அண்ணாமலை தீவிரப்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளார். அதன்​படி, மக்கள​வை தேர்​தலை​யொட்டி, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம் மேற்​கொண்​டது​போல, சட்டப்​பேரவை தேர்​தலை​யொட்டி, ஜனவரி மாதத்​துக்கு பிறகு, தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து கிராமங்​களி​லும் நடைபயணம் மேற்​கொள்ள அண்ணாமலை திட்​ட​மிட்​டிருக்​கிறார்.

தொடர்ந்து சட்டப்​பேரவை தொகுதி வாரி​யாக​வும் சுற்றுப்​பயணம் மேற்​கொண்டு, மக்களின் குறைகளை கேட்​டறிந்து மனுக்களை பெற இருக்​கிறார். பின்னர், பெருங்​கோட்​டங்கள் வாரியாக பொதுக்​கூட்​டங்​கள், மாநில நிர்​வாகி​கள், மாவட்ட நிர்​வாகி​களின் கூட்​டங்களை நடத்​த​வும் அண்ணாமலை திட்​ட​மிட்​டுள்​ளார். அதேநேரம், திமுகவை வீழ்த்த புது வியூகம் அமைத்​திருப்​ப​தாக​வும், இதையொட்டிய அண்ணா​மலை​யின் செயல்​பாடுகள் ஜனவரிக்கு பிறகு தீவிரமாக இருக்​கும் எனவும் பாஜக​வினர் கூறுகின்​றனர்.

2026 சட்டப்​பேரவை தேர்தல் பாஜக - திமுக இடையிலான போட்​டியாக இருக்​கும் எனவும், அதை எ​திர்​கொள்​வதற்கான ​முழு​மையான செயல்​திட்​டங்களை அண்ணாமலை வகுத்​திருப்​ப​தாக​வும் நிர்​வாகி​கள் தெரிவிக்​கின்​றனர். அதன்​படி, 2026-ல் தமிழகத்​தில் பாஜக கூட்​டணி ஆட்​சியை அமைப்​ப​தில் அண்ணாமலை உறு​தி​யாக இருக்​கிறார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x