Published : 22 Nov 2024 01:10 AM
Last Updated : 22 Nov 2024 01:10 AM

திருச்செந்தூர் ‘தெய்வானை’ உட்பட சில கோயில் யானைகளுக்கு வனத்துறை அனுமதி இல்லை: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: திருச்​செந்​தூர் கோயி​லின் ‘தெய்​வானை’ உட்பட சில கோயில் யானைகள் வனத்​துறை அனும​தி​யின்றி பயன்​படுத்​தப்​படு​வதாக அமைச்சர் பொன்​முடி தெரி​வித்​துள்ளார்.

சென்னை தலைமைச் செயல​கத்​தில் வனத்​துறை அமைச்சர் பொன்​முடி கூறிய​தாவது: மாமல்​லபுரம் - புதுச்​சேரி இடையே தேசிய நெடுஞ்​சாலை அமைக்க திட்​ட​மிடப்​பட்டு, அந்த சாலை​யின் நடுவே சில இடங்​களில் வனத்​துறை நிலங்கள் வருவ​தால் சாலை பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. அப்பகு​தி​களில் வனத்​துறை சார்​பில் தேசிய நெடுஞ்​சாலை ஆணையத்​துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்​துள்ளோம்.

யானை, புலி உள்ளிட்ட வன உயிரினங்களை பாது​காக்க வனத்​துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்​கப்​பட்டு வருகின்றன. குடி​யிருப்பு பகுதி​களுக்​குள் யானைகள் வருவதை தடுக்க, வனத்​துறை சார்​பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்​கப்​பட்டு வருகிறது.

திருச்​செந்​தூர் கோயில் யானை ‘தெய்​வானை’ தாக்​கிய​தில் 2 பேர் உயிரிழந்​துள்ளனர். இந்த யானையை கோயி​லில் வைக்க வனத்​துறை அனுமதி இல்லை. அந்த யானை அசாமில் இருந்து வந்ததாக கூறப்​படு​கிறது. இருப்​பினும், அதை பாது​காக்க வேண்டிய பொறுப்பு வனத்​துறைக்கு உள்ளது. கோயில் யானை​களுக்கு அறநிலைய துறை​தான் அனுமதி பெற வேண்​டும். இதுகுறித்து அந்த துறை​யிடம் பேசி வருகிறோம்.

கோயில் யானையை கால்நடை மருத்​துவர்கள் ஆய்வு செய்து வருகின்​றனர். அவர்கள் தரும் அறிக்கை​யின் அடிப்​படை​யில், யானையை சிறப்பு முகா​முக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்​யப்​படும். தமிழக அரசின் மலையேற்ற திட்​டங்களை எதிர்த்து நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. இதில், சட்டப்படி நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அரிட்​டாபட்டி, உயிர் பன்முகத்​தன்மை பகுதியாக திமுக ஆட்சி​யில் ஏற்கெனவே அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. வெள்ளை வல்லூறு, ராஜாளி போன்ற பல பறவை இனங்கள் அங்கு உள்ளன. அது வனப் பகுதியாக பாது​காக்​கப்பட வேண்​டும் என்பதே முதல்​வரின் நோக்​கம். இந்த நிலை​யில், அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்​துள்ளது. அடுத்து, தமிழக வனத்​துறை​யிடம் மத்திய அரசு அனு​மதி கேட்​கும்​போது, அந்த ​திட்​டத்தை நிராகரிக்​கு​மாறு தமிழக அரசு சார்​பில்​ வலி​யுறுத்​து​வோம்​. இவ்​வாறு அவர்​ கூறினார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x