Last Updated : 19 Nov, 2024 04:04 PM

 

Published : 19 Nov 2024 04:04 PM
Last Updated : 19 Nov 2024 04:04 PM

செங்கல்பட்டு - வல்லிபுரம் உரப்பூங்கா திட்டத்துக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு!

வல்​லிபுரம் ஊராட்சி உரப்​பூங்கா அமைக்க தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள நிலப்​பகு​தி.

செங்​கல்​பட்டு மாவட்டம் திருக்​கழுக்​குன்றம் ஒன்றியம் வல்லிபுரம் ஊராட்​சி​யில், சென்னை ஐஐடி சார்​பில் சமூக பொறுப்பு​ணர்வு திட்​டத்​தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றாக, திடக்​கழிவு மேலாண்மை திட்​டத்​தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்​கும் வகையில் உரப்​பூங்கா அமைக்க திட்​ட​மிடப்​பட்​டது. இதற்கு, சென்னை ஐஐடி சார்​பில் ரூ.77 லட்சம் நிதி ஒதுக்​கப்​பட்​டது.

இதையடுத்து, சர்வே எண் 123-ல் உள்ள நிலத்​தில் ஒருபகு​தியாக 9.50 சென்ட் நிலம் தேர்வு செய்​யப்​பட்டு, திட்​டத்தை செயல்​படுத்​த​வும் நிலம் தேர்​வுக்​கும் ஊராட்சி மன்றத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதனால், விரை​வில் நவீன கட்டமைப்பு​களுடன் திடக்​கழிவு மேலாண்மை திட்​டத்​தில் உரப்​பூங்கா மற்றும் குப்பை தரம் பிரிக்​கும் யார்டு அமைக்​கப்​படும் என பொது​மக்கள் எதிர்​பார்த்​தனர்.

இந்நிலை​யில், அதேபகு​தி​யில் வசிக்​கும் சிலர் மேற்​கண்ட திட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து வட்டாட்​சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவல​கத்​தில் மனுக்களை வழங்​கினர். உரப்​பூங்​காவை மாற்று இடத்​தில் அமைக்க வேண்​டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சோபியா அமுல்

இதுகுறித்து, வல்லிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா அமுல் கூறிய​தாவது: திடக்​கழிவு மேலாண்மை திட்​டத்​தின்கீழ் மேற்​கண்ட திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்​கொண்​டுள்​ளோம். ஊராட்சி மன்றத்​தில் முறையாக தீர்​மானம் நிறைவேற்றிய பிறகே பணிகள் தொடங்​கப்​பட்டன.

ஆனால், தனியார் நிலத்​துக்கு செல்ல பாதை வேண்​டும் என்ப​தற்​காகவே இத்திட்​டத்தை எதிர்க்​கின்​றனர். எனினும், தனியார் நிலத்​துக்கு செல்ல பாதைக்காக 20 அடி நிலம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்​கும்படி மாவட்ட ஆட்சி​யரிடம் மனு அளித்​துள்ளோம் என்றார்.

இதுகுறித்து, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவிக்குமார் கூறும்போது, திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், இப்பகுதி விவசாய நிலங்களுக்கு இடுபொருட்களை எடுத்து செல்லும் வழியாக உள்ளது. இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. வேறு ஒதுக்குப்புறமான இடத்தில் அதை மேற்கொள்ளலாம் என்றுதான் சொல்கிறோம் என்றார்.

இதுகுறித்து, அப்பகுதி பொது​மக்கள் கூறிய​தாவது: மேற்​கண்ட பணிகளுக்காக தேர்வு செய்​யப்​பட்ட நிலத்​தால் பொது​மக்​களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. அதேபோல், தனியார் நிலத்​துக்கு பாதை ஏற்படுத்த நிலமும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனால், இத்திட்​டத்தை உயர்​நிலைப் பள்ளி அருகில் அமைந்​துள்ள கோயில் நிலத்​தில் அமைக்க வேண்​டும் என கூறி, சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர். அரசு நிலம் இருக்​கும்​போது, எதற்காக கோயில் நிலத்​தில் இத்திட்​டத்தை செயல்​படுத்த வேண்​டும் என கேள்வி எழுப்​பினால், அருகில் உள்ள மேய்க்​கால் புறம்​போக்கு நிலத்தை காண்​பிக்​கின்​றனர். அதனால், மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றனர்.

ஆய்வுக்கு உத்தர​விட்ட ஆட்சியர்: இதுகுறித்து, செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்​ராஜ் கூறிய​தாவது: வல்லிபுரம் ஊராட்சி நிர்​வாகத்​தால் செயல்​படுத்​தப்பட உள்ள உரப்​பூங்கா​வுடன் கூடிய குப்பை கிடங்கு அமைக்​கும் திட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரிவிக்​கப்​பட்​டுள்ள​தால், செங்​கல்​பட்டு சார் ஆட்சியர் மற்றும் ​திருக்​கழுக்​குன்​றம் வட்​டாட்​சி​யர் மூலம் ஆய்வு செய்து உரிய ​விசா​ரணை​யுடன் நட​வடிக்கை எடுக்க தெரி​வித்​துள்ளேன். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x