Published : 18 Nov 2024 05:37 AM
Last Updated : 18 Nov 2024 05:37 AM

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணியின் உணவில் வண்டு: ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம்

சென்னை: வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்​கப்​பட்ட உணவில் வண்டு இருந்த விவகாரத்​தில், ஒப்பந்​த​தா​ரருக்கு தெற்கு ரயில்வே ரூ.50,000 அபராதம் விதித்​துள்ளது. திருநெல்​வேலி​யில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் நேற்று முன்​தினம் காலை புறப்​பட்​டது.

இந்த ரயிலில் சி-2 பெட்​டி​யில் பயணித்த ஒருவருக்கு வழங்​கப்​பட்ட சாம்​பாரில் வண்டு இருந்தது அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யது. இதுதொடர்பாக வெளியான வீடியோ காட்சி, இணையத்​தில் வைரலானது.

சாம்​பாரில் வண்டு இருந்தது குறித்து பயணி புகார் அளித்ததை தொடர்ந்​து,​அந்த பயணியிடம் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்​டனர். உணவு விநி​யோகிக்​கும் ஒப்பந்த நிறு​வனம் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்றும் உறுதி​யளித்​தனர். அந்த உணவை விநி​யோகம் செய்த ஒப்பந்​த​தா​ரரான பிருந்தாவன் ஃபுட் புராடக்ட்ஸ் நிறு​வனத்​துக்கு தெற்கு ரயில்வே ரூ.50,000 அபராதம் விதித்​துள்ளது.

ரயில்வே அதிகாரிகள் கூறும்​போது, ‘‘சம்பந்​தப்​பட்ட ஒப்பந்​த​தா​ரருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​பட்டு, மேல் நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே விரிவான விசாரணை நடத்து​கிறது. பயணி​களுக்கு வழங்​கப்​படும் உண​வின் தரத்தை உறுதி செய்​வ​தில் ர​யில்​வே உறு​தியாக உள்​ளது’’ என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x