Published : 14 Apr 2014 12:00 AM
Last Updated : 14 Apr 2014 12:00 AM
கடந்த சில நாட்களாக நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில், இதுவரை வாக்குப்பதிவு முடிந்துள்ள பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக அதிகரித்துள்ளது. அதுபோல், தமிழகத்திலும் கடந்த தேர்தல்களில் பதிவானதைவிட அதிக சதவீத வாக்குகள் பதிவாகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மொழிவாரி மாநிலம்
தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு என்பது ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாகவே இருந்து வரு கிறது. நாடு சுதந்திரமடைந்த பிறகு, 1952-ல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் பிரிக்கப்படாத சென்னை மாகாணமாக இருந்தபோது, 57.89 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
ஆனால், மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு 1957-ம் ஆண்டில் நடந்த முதல் நாடாளு மன்ற தேர்தலில், வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவான 47.71 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவா யின. அதன்பிறகு, 10 ஆண்டுகள் கழித்து, ‘மெட்ராஸ்’ என்னும் பெயருக்கு விடை கொடுத்து தமிழ்நாடு என்று மாற்றுவதற்கு முன்பாக 1967-ல் நடந்த தேர்தலில் தான் நாடாளுமன்ற தேர்தல் வர லாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 76.59 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தி படுகொலை
ஆனால், அதன்பிறகு நடை பெற்ற 11 நாடாளுமன்ற தேர்தல் களில் 3 முறை மட்டுமே 70 சத வீதத்துக்கு அதிகமாக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அவற்றில், 1984-ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, மக்கள் மிக எழுச்சியுடன் வாக்களித்த நாடாளு மன்ற தேர்தல்களில் அது ஒன்று. அப்போது தமிழகத்தில் 73.09 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
ஆனால், அதன்பிறகு வாக்குப் பதிவு சதவீதம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கவில்லை.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் கூட தமிழகத்தில் 63.92 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாயின. அது 1998 மற்றும் 99-ல் நடந்த தேர்தல்களில் 57 சதவீதமாகக் குறைந்துவிட்டது. 2004-ம் ஆண்டில் தான் அது 60 சதவீதமாக அதி கரித்தது.
இருப்பினும், வாக்குப்பதிவு கணிசமாக குறைந்து வருவதை உணர்ந்த தேர்தல் ஆணையத்தி னர், தீவிர முயற்சிகள் மேற்கெ ாண்டதன் காரணமாக 2004 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2009-ல் அதிகம்
கடந்த 2009 நாடாளுமன்ற தேர்த லில் வாக்குப்பதிவு 72.98 சதவீத மாக அதிகரித்தது. அதன்பிறகு கடந்த 2011 சட்டமன்ற தேர்த லில், இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் இல்லாதவகை யில் மிக அதிகபட்சமாக 78.01
சதவீதம் வாக்குகள் பதிவாகி யிருப்பது குறிப்பிடத்தக்கது.
2011 சட்டமன்ற தேர்தலின் போது 4.71 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 3 ஆண்டுகளில் 82 லட்சம் அதிகரித்து 5.50 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வாக்குப்பதிவு சதவீதமும், வாக்காளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு, தங்களது தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்களே காரணம் என்று தேர்தல் துறையினர் கூறுகின்றனர்.
மேலும், பெண் வாக்காளர் களும், நகர்ப்பகுதிகளில் வசிக்கும் மேல்தட்டு மக்களும் தற்போது அதிக அளவில் வாக்களிக்கத் தொடங்கியிருப்பதே அதற்குக் காரணம் என்று தேர்தல் துறை யினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதுமே வாக்குப்பதிவு பரவலாக அதிகரித்துள்ளது. அதனால் தமிழகத்திலும் கடந்த காலங்களைக் காட்டிலும் வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என்றே தேர்தல் ஆணையத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT