Published : 17 Nov 2024 10:39 AM
Last Updated : 17 Nov 2024 10:39 AM
சென்னை: சென்னை அருகே குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவர் மனைவி பவித்ரா (30), மகள் வைஷாலினி (6), மகன் சாய் சுந்தரேசன் (1) ஆகியோருடன் வசித்து வந்தார். கிரிதரன் குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
குழந்தை வைஷாலினி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். வீட்டில் எலி தொந்தரவு அதிகமாக இருந்ததால், எலிகளை கட்டுப்படுத்து வதற்காக சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் பூச்சிக்கொல்லி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளார்.
அண்மையில் அவரது வீட்டுக்கு வந்த 2 பேர் வீட்டில் ஆங்காங்கே எலி மருந்தை தெளித்துவிட்டு, வீடு முழுவதும் எலிகள் வராமல் இருக்க மருந்து அடித்துள்ளனர். மருந்திலிருந்து பரவிய நெடியால் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தன. பெற்றோர் போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, வேளாண்துறை அதிகாரிகள் விதிமுறை மீறி செயல்பட்டதால், அந்த தனியார் நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். தொடர்ந்து, நேற்று அந்நிறுவனத்துக்கு சீல் வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT