Published : 15 Nov 2024 12:38 PM
Last Updated : 15 Nov 2024 12:38 PM

“மருத்துவர் பாலாஜி மீது குற்றம்சாட்ட திமுக, அதன் சார்பு ஊடகங்கள் முயற்சி” - ஹெச்.ராஜா கண்டனம்

ஹெச்.ராஜா | கோப்புப்படம்

சென்னை: “மருத்துவர் முறையாக சிகிச்சை வழங்கவில்லை, என்பது போன்ற கதைகளை உருவாக்க, திமுக மற்றும் அதன் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, இதுபோன்ற கதைகளை உருவாக்க திமுக சார்பு ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது தேவையற்றது, தவிர்க்கப்பட வேண்டும்” என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

சென்னை கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர ஹெச்.ராஜா இன்று (நவ.15) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, திமுகவினர் புரோட்டா கடைக்குச் சென்று புரோட்டா உண்பார்கள், காசு கொடுக்கமாட்டார்கள். காசு கேட்டால் அடிப்பார்கள். மகளிர் அழகு நிலையத்துக்குச் சென்றாலும் இதே நிலைதான். திமுகவினருக்கு இதுதான் வேலை. இந்த அரசாங்கத்தின் உளவியல் பொதுமக்களுக்கு விரோதமாக இருக்கிறது.

அதனுடைய நீட்சிதான், இப்போது உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தான சூழ்நிலை தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் முறையாக சிகிச்சை வழங்கவில்லை, என்பது போன்ற கதைகளை உருவாக்க, திமுக மற்றும் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நானும் மருத்துவமனைகளுக்குச் சென்றிருக்கிறேன். என் வியாதிக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பது மருத்துவருக்குத்தான் தெரியும்.

ஒரு சாதாரண காய்ச்சல் மாத்திரை பாராசிட்டமால், அது உடலில் எப்படி வேலை செய்கிறது என்று சொன்னால்தான் நான் அந்த மாத்திரையை எடுத்துக்கொள்வேன் என்று கூற முடியுமா? அவ்வாறு கூறுவது முறையல்ல. எனவே, இதுபோன்ற கதைகளை உருவாக்க திமுக சார்பு ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது தேவையற்றது, தவிர்க்கப்பட வேண்டும். மருத்துவர் பாலாஜி விரைவில் குணம்பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அரசு முதலில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் ஏன் இந்தச் சூழல் வரப்போகிறது? இது ஸ்டாலின் அரசாங்கத்தின் தோல்வி. துணை முதல்வர் பதவி கொடுத்துள்ளது எதற்கு சும்மா விளையாடுவதற்கா? இந்த அரசு, துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கின்றனர். இந்த அரசு செயல்படாமல் இருக்கின்ற காரணங்களால்தான், மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகிறது. திமுக சார்பு ஊடகங்கள் மருத்துவர் பாலாஜி மீது குற்றம்சாட்ட முயற்சிக்கின்றன.” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x