Published : 13 Nov 2024 05:09 PM
Last Updated : 13 Nov 2024 05:09 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலத்தில் பழமையான ஓலைச் சுவடிகளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று 11.30 மணியளவில் தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். இதற்காக சென்னையில் இருந்து காலை விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி மதியம் 12 மணியளவில் தஞ்சாவூர் அரண்மனைக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து அரண்மனையில் வசித்து வரும் மராட்டிய மன்னர்களின் அரச குடும்பத்தினர் வழிபாடு செய்யும் சந்திர மவுலிஸ்வார் சன்னதிக்கு வழிபாடு செய்ய சென்றார்.
அங்கே ஆளுநரை, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அவரது குடும்பத்தினர் மங்கள வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அங்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர் சரஸ்வதி மகால் நூலகத்துக்கு வந்த ஆளுநரை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், சிவாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் சரஸ்வதி மகால் நூலக ஒலி, ஒளி காட்சியகத்தில் தஞ்சாவூரின் வரலாறு, சுற்றுலா தலங்கள் அடங்கிய குறும் படத்தை 25 நிமிடங்கள் பார்வையிட்டார். பின்னர் தஞ்சாவூர் சரஸ்வதி மகாலுக்கு சென்று, அங்கு அருங்காட்சியகத்தில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், ஓவியங்கள், பழமையான போர்க் கருவிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். தமிழக ஆளுநருடன் அவரது மகன் ராகுல் ரவியுடம் உடன் வந்திருந்தார். இதையடுத்து 12.45 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் சுற்றுலா மாளிகைக்கு சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT