Last Updated : 13 Nov, 2024 04:36 PM

 

Published : 13 Nov 2024 04:36 PM
Last Updated : 13 Nov 2024 04:36 PM

அறநிலையத் துறை சார்பில் ரூ.190.40 கோடியில் 29 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.42.75 கோடியிலான 27 முடிவுற்ற திட்டப் பணிகள், கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம், அழகர்கோயில், கள்ளழகர் கோயிலில் ரூ.49.25 கோடி மதிப்பில், பெருந்திட்ட வளாக மேம்பாடுமற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி, திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் கோயிலில் ரூ.44.57 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணி, குபேரலிங்கம் அருகில் வணிக வளாகம் கட்டுதல், கோபுரங்கள் மற்றும் விமானங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி மற்றும் ஏழு தீர்த்த குளங்களை சீரமைக்கும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், தண்டராம்பட்டு, வானாபுரம், பிள்ளையார் மாரியம்மன் கோியில், திருவண்ணாமலை, நந்தவக் கட்டளை, திருச்சிராப்பள்ளி, சமயபுரம், மாரியம்மன் கோயில், நாகப்பட்டினம், துளசியாபட்டினம், ஔவையார் மற்றும் விஸ்வநாத சுவாமி கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, சுப்பிரமணிய சுவாமி கோயில், கருமத்தம்பட்டி கருமத்தம்பட்டி, சென்னியாண்டவர் கோயில், திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில், திருவள்ளூர் , திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோயில், ஈரோடு , கொடுமுடி, சடையப்பசுவாமி கோயில், பெருந்துறை ,தங்கமேடு, தம்பிகலை ஜயன் சுவாமி கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், திண்டுக்கல் , கீரனூர், வாகீஸ்வரர் கோயில், செங்கல்பட்டு அரசர்கோயில், வரதராஜப்பெருமாள் கோயில், சென்னை, திருவல்லிக்கேணி, தீர்த்தபாலீஸ்வரர் கோயில், நாமக்கல், வளப்பூர் நாடு, அறப்பளீஸ்வரர் கோயில், கூவைமலை, பழனியாண்டவர் கோயில் ஆகியவற்றில் பல்வேறு கட்டிடங்களுக்கான பணிகள், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரியில் உதவி ஆணையர் அலுவலகம் என மொத்தம் ரூ.190.40 கோடியில் 29 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும், கோயம்புத்தூர், மருதமலை சுப்பிரமணிய சாமி கோயில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில், நாகப்பட்டினம், சிக்கல் நவநீதேஸ்வரர் கோயில், திருச்சிராப்பள்ளி,சமயபுரம் மாரியம்மன் கோயில், மயிலாடுதுறை திருப்புங்கூர் சிவலோகநாதர் கோயில், திருவண்ணாமலை மாவட்டம், அ.கோ.படைவீடு ரேணுகாம்பாள் கோயில், காஞ்சிபுரம் குன்றத்தூர் சுப்பிரமணியசாமி கோயில் உள்ளிட்ட 15 கோயில்களில் ரூ. 42.75 கோடி 27 முடிவுற்ற திட்டப்பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், அறநிலையங்கள் துறை செயலர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x