Published : 19 Aug 2014 11:32 AM
Last Updated : 19 Aug 2014 11:32 AM

‘ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் தமிழகம் முன்னணி’

கோவையில், நோக்கியா மைக்ரோசாப்ட் நிறுவனங் களின் கூட்டமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லூமியா-530 ஸ்மார்ட்போனை திங்கள்கிழமை அறிமுகம் செய்து நோக்கியா இந்தியாவின் தென்மாநில இயக்குநர் டி.எஸ்.ஸ்ரீதரன் பேசியதாவது:

உலக அளவில் செல்போன் பயன்பாட்டில் குறிப்பாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்பாடு, நடப்பு ஆண்டில் 80.57 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 18 முதல் 24 வயதுடைய இளம் தலைமுறையினர் 48 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களின் வரிசையில் கோவையும் இருக்கிறது. நோக்கியா மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பில் லூமியா-530 என்ற ஸ்மார்ட்போன் வகையை அறிமுகம் செய்கிறோம். இதன்விலை ரூ.7,300 மட்டுமே. ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த செல்போனில் உள்ளன. இரு சிம்கார்டுகள் பயன்படுத்தலாம். தகவல்களை அதிகம் பதிவேற்றிக் கொள்ளலாம். 3 லட்சம் ஆப்ஸ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். கணினிக்கு இணையானது. இணையதள தேடல் வசதி வேகம் அதிகம். எங்களது நிறுவனம் 2011-ம் ஆண்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இறங்கியது. ஆரம்பத்தில் ரூ.25 ஆயிரத்திற்கு மேல் இருந்த ஸ்மார்ட்போன் விலை தற்போது குறைக்கப் பட்டுள்ளது. இந்த மாடலை இளைஞர்களிடம் அதிகமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x