Published : 10 Nov 2024 03:19 PM
Last Updated : 10 Nov 2024 03:19 PM

விருதுநகரில் ரூ.77 கோடியில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறப்பு

விருதுநகர்: விருதுநகரில் ரூ.77 கோடியில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விருதுநகர் வந்தார். பட்டாசு ஆலை மற்றும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதல்வர் நேற்று ஆய்வு செய்தார். இன்று காலை ரூ.77 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

புதிய கட்டிடத்தில் உள்ள மக்கள் அரங்கம், 4-வது தளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த முதல்வர், விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சிறப்புகள்: மதுரை - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 7.67 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் தரைத்தளத்துடன் சேர்த்து 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 132 இருக்கை வசதி கொண்ட மக்கள் குறைதீர் கூட்ட அரங்கம், 200 இருக்கை வசதி கொண்ட கூட்ட அரங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை அலுவலகம், தேசிய தகவல் மையம், மாவட்ட கருவூலம், அவசர கால உதவி மையம் உட்பட 22 துறை அலுவலகங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட விரிவான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x