Published : 10 Nov 2024 04:47 AM
Last Updated : 10 Nov 2024 04:47 AM
சென்னை: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தொடக்கக் கல்வி துறையின்கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்யக்குழு அமைக்கப்பட்டது.
தேர்வு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மாவட்டத்துக்கு தலா 3 என 38 மாவட்டங்களுக்கு 114 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. சென்னையில் சைதாப்பேட்டை சென்னை தொடக்கப் பள்ளி, சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா மாதிரி தொடக்கப் பள்ளி, பழைய வண்ணாரப்பேட்டை தனலட்சுமி தொடக்கப் பள்ளி ஆகிய 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கேடயம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. கேடயங்களை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்க உள்ளார். 114 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT