Published : 08 Jun 2018 09:20 AM
Last Updated : 08 Jun 2018 09:20 AM
சென்னை சோழிங்கநல்லூரில் அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுக்க 6 ஆண்டுகளுக்கு மேல் தாமதமானதால், வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், செலுத்திய தொகையில் ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டியை நஷ்டஈடாக வழங்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள் ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சுயநிதி திட்டத்தின் கீழ் சோழிங்கநல்லூர் குமரன் நகரில் குறைந்த வருவாய் பிரிவினருக்கு 392 வீடுகளுடன் 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்ய 2011-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. குலுக்கல் முறை யில் ஒதுக்கீடுதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. 550 சதுர அடி கொண்ட வீடு ஒன்றின் விலை ரூ.13 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.
2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு வீடுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன்படி கட்டித் தரவில்லை. இந்த வீடுகளைக் கட்டி முடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கொண்டே போனார்கள். இதுகுறித்து ஒதுக் கீடுதாரர்கள் சிலர் கூறும்போது, “வீடுகள் வழங்க 6 ஆண்டு களுக்கு மேல் தாமதமாவதால், வீட்டு வாடகை, வங்கிக் கடனுக் கான மாத தவணை என சுமார் ரூ.10 லட்சத்தை இழந்துள்ளோம். கடன் சுமையால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்” என்றனர்.
தாமதத்துக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, “20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக இருந்தால், அதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அனுமதி சான்று பெற வேண்டும். அதனை வீட்டு வசதி வாரியம் வாங்காததால், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கட்டுமான பணி நிறைவுச் சான்று வழங்கவில்லை. அதனால் மின்சார வாரியம் டிரான்ஸ்பார்மர் நிறுவி மின் இணைப்புகள் தர மறுக்கிறது” என்று இதுபற்றி விவ ரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எஸ்.வெங்கடேசன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் இணைப்பு பெறுவது நிலுவையில் உள்ளது. மின் இணைப்புகள் கிடைத்ததும் வீடு கள் ஒப்படைக்கப்படும். தாமத மான காலத்துக்கு ஒதுக்கீடுதாரர்களுக்கு வாரிய விதிமுறைப்படி 4 சதவீத வட்டி வழங்க வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் ஒதுக்கீடுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்” என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுற்றுச்சூழல் அனு மதி பெறுவதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்து வரு கிறோம். அதையடுத்து சிஎம்டிஏ- வின் கட்டுமானப் பணி நிறைவு சான்று பெறப்படும். பின்னர் மின் இணைப்புகள் பெறப்பட்டு ஒதுக்கீடுதாரர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். ஓராண்டுக்கு முன்பே மின் இணைப்பு வழங்குவதற்காக மின் வாரியத்துக்கு ரூ.66 லட்சம் வழங்கிவிட்டோம். அப்போது பணத்தை வாங்கிவிட்டு, இப் போது கட்டுமானப் பணி நிறைவு சான்று பெற்ற பிறகே மின் இணைப்பு வழங்கப்படும் என்று பிடிவாதமாகக் கூறுகிறார்கள். அதனால்தான் வீடுகள் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாரியம் ஒப்புதல் அளித்ததும் ஒதுக்கீடுதாரர்கள் செலுத்திய தொகைக்கு ஏற்ப ஆண்டுக்கு 4 சதவீத வட்டி நஷ்டஈடாக வழங்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT