Published : 06 Nov 2024 02:18 PM
Last Updated : 06 Nov 2024 02:18 PM
விழுப்புரம்: விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சட்டமன்றத் தொகுதிகள் தோறும் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகங்கள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம் தொகுதிக்கான நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அப்போது வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமசிகாமணி, எம்எல்ஏ-க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, இளைஞரணி அமைப்பாளர் தினகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் செயல்பட்டுவரும் விழுப்புரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தானியக் கிடங்கில் நெல் உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பருத்தி உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் இருப்பு, அவை சேமிக்கப்பட்டு வரும் விதம், அவற்றை பராமரிப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர் கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் சந்துரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT