Last Updated : 05 Nov, 2024 04:59 PM

1  

Published : 05 Nov 2024 04:59 PM
Last Updated : 05 Nov 2024 04:59 PM

பாஜக உறுப்பினர் சேர்க்கையில் நிர்வாகிகளுக்கு ஆர்வம் இல்லை - இலக்கை அடைவதில் சிக்கல்

மதுரை: தமிழகத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கையில் நிர்வாகிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பதால், உறுப்பினர் சேர்க்கைக்கான இலக்கு பூர்த்தியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

பாஜகவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர்கள் புதுப்பித்தல் மற்றும் சேர்க்கை நடைபெறும். அதன்படி, தற்போது பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 50 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றதால், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு மொத்தமாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என, பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியிருந்தார்.

பின்னர், அண்ணாமலை மேல்படிப்புக்காக வெளிநாடு சென்றதால் ஒருங்கிணைப்பாளராக ஹெச்.ராஜா நியமிக்கப்பட்டார். உறுப்பினர் சேர்க்கை முகாமை அவர் தொடங்கி வைத்து, முதல் உறுப்பினர் அட்டையும் பெற்றுக் கொண்டார். உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்.1 முதல் அக்.15 வரை 45 நாட்கள் நடைபெற்றது. அமைப்பு ரீதியாக 66 கட்சி மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு லட்சம் வீதம் குறைந்தபட்சம் 66 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க கட்சியி னருக்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், மாவட்டத்துக்கு 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையே சேர்க்கப்பட்டுள்ளனர்.

மதுரை கிழக்கு மாவட்டத்தில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் உள்ள மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதிகளில் அதிகளவு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மதுரை நாடாளு மன்றத்தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக 40 ஆயிரத்துக்கும் அதிக வாக்கு கள் பெற்றது. ஆனால், இந்த தொகுதியில் சுமார் 4 ஆயிரம் உறுப்பினர்கள் மட்டுமே சேர்க்கப் பட்டுள்ளனர்.

தீவிர உறுப்பினர் சேர்க்கை: தற்போது, தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைத் தொகுதி வாரி யாக 50 உறுப்பினர்களை சேர்த்தவர்கள் தீவிர உறுப்பினர் களாக சேர்க்கப்படுவர். தீவிர உறுப்பினர்களாக இருப்பவர்கள் தான் கட்சி பொறுப்புகளுக்கு வரமுடியும். இதனால், தீவிர உறுப் பினராகும் முயற்சியில் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான பொறுப்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் மதுரையில் 16 மாவட்ட தலை வர்களுடன் ஆலோசனை நடத் தினார். இதில் ஒரு மண்டலில் இருந்து நூறு தீவிர உறுப்பினர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8, 10 பேர்தான் தீவிர உறுப்பினராகும் தகுதி பெற்றி ருப்பது தெரிந்தது.

இதுகுறித்து கட்சியினர் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தல் பணப்பரிவர்த்தனை முறை கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கட்சி மேலிடத்துக்கு அளிக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கின்றனர். அதே நேரத்தில் கட்சியின் மையக் குழு மீது புகார் தெரிவிப்பவர்கள் உடனடியாக கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர். மற்ற நிர்வாகி கள் மீது தெரிவிக்கும் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதுகூட கிடையாது.

கட்சித் தலைவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளால் கட்சி யினர் அதிருப்தியில் உள்ளனர். இதனால் உறுப்பினர்கள் சேர்க் கையில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். கட்சியினரின் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பது, முறைகேட்டில் ஈடுபடும் நிர்வாகி கள் மீது நடவடிக்கை எடுப்பது, கட்சிக்காக உண்மையாக பாடுபடுபவர்களுக்கு அங்கீகாரம் வழங்கு வது போன்ற செயல்கள்தான் பாஜக வளர்ச்சியை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x