Published : 04 Nov 2024 12:52 PM
Last Updated : 04 Nov 2024 12:52 PM
கடலூர்: கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருமல்,சளி, காய்ச்சல், உடல் வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் வலி, சோர்வு, சளி இருமல், காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வருகின்றனர் . இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் கடலூர், சிதம்பரம் ,குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில் ,திட்டக்குடி விருத்தாசலம் ,பண்ருட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் சிவக்கம், வல்லம் படுகை, கவரப்பட்டு, புது சத்திரம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குவிந்து தங்களுடைய உடல் நிலையை மருத்துவர்களிடம் தெரிவித்து மருந்து, மாத்திரைகள் வாங்கி செல்கின்றனர்.
ஒரே நேரத்தில் மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500க்கும் மேற்பட்டோர்கள் குவிந்து வருகின்றனர். இதுகுறித்து கடலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக உடல் வலி, சளி இருமல் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT