Published : 03 Nov 2024 09:59 AM
Last Updated : 03 Nov 2024 09:59 AM
சென்னை: அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையைச் சேர்ந்த ஜிஐ ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் முறைகேடாக பங்குகளை விற்பனை செய்து அதன்மூலம் கிடைத்த ரூ.195 கோடியை மறைத்து அத்தொகையை ஐக்கிய அரபு நாடுகளில் இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிறுவனத்தில் மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அமலாக்கத் துறைஇயக்குநரக தென்மண்டல அதிகாரிகள் அந்நிறுவனத்தில் சோதனை நடத்தியபோது அந்தத் தகவல் உண்மைதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.195 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை அரசுடமையாக்க அமலாக்கத் துறை விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. மேலும் அந்நிறுவனத்துக்கு ரூ.566.5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT