Published : 03 Nov 2024 04:52 AM
Last Updated : 03 Nov 2024 04:52 AM

பயணிகளிடம் அதிக வரவேற்பு உள்ளதால் நாகை - இலங்கை கப்பல் சேவை: வாரத்துக்கு 5 நாட்களாக அதிகரிப்பு

நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல்.

நாகப்பட்டினம்: இரு நாட்டு பயணிகளிடம் அதிக வரவேற்பு இருப்பதால், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல்இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 8-ம் தேதி முதல்வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை - இலங்கை இடையே ‘சிவகங்கை’ என்ற பயணிகள் கப்பல்சேவை கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கியது. அப்போது, இரு மார்க்கத்திலும் தினமும் கப்பல் இயக்கப்பட்டது.

இந்த நிலையில், பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால், செவ்வாய், வியாழன், ஞாயிறு என வாரத்தில் 3 நாட்களாக கப்பல் சேவை குறைக்கப்பட்டது. பின்னர், சனிக்கிழமை உட்பட 4 நாட்களுக்கு கப்பல் சேவை நடைபெற்றது.

முன்பதிவு அதிகரிப்பு: தற்போது, இந்த கப்பல் சேவைக்கு பயணிகளிடம் அதிக வரவேற்பு உள்ளது.பயணத்துக்கான முன்பதிவும் அதிகரித்துள்ளது. எனவே, இனி வாரத்தில் 5 நாட்களுக்குகப்பலை இயக்க நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

அதன்படி, வரும் 8-ம் தேதி முதல்வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து சேவை இருக்கும் என்று சிவகங்கை கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x