Published : 03 Nov 2024 06:39 AM
Last Updated : 03 Nov 2024 06:39 AM
சென்னை: தவெக தலைவர் விஜய், அதிமுகவை விமர்சிக்கவில்லை என்பதால் அவரை அதிமுகவினர் விமர்சிக்க வேண்டாம் என்றுகட்சி நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த 27-ம்தேதி விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். அப்போது, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அந்த மாநாட்டில் பாஜக, திமுககட்சிகளை விமர்சித்து, தனது கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என்பதையும் விஜய்தெரிவித்துவிட்டார். எம்ஜிஆரையும் பாராட்டி பேசினார்.
இந்நிலையில், தீபாவளிக்கு முன்பு கட்சி நிர்வாகிகள், பழனிசாமியை சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது விஜய் மாநாட்டு பேச்சு குறித்து பழனிசாமியிடம் நிர்வாகிகள் விவாதித்துள்ளனர்.
அப்போது, விஜய்யை விமர்சிக்கலாமா என நிர்வாகிகள் கேட்டபோது, நமது தலைவரின் சிறப்பை விஜய் விவரித்துள்ளார். நம்மைபற்றி அவர் எதுவும் விமர்சிக்கவில்லை என்பதால், அதிமுகவினரும் விஜய்யை விமர்சிக்கவேண்டாம் என்று பழனிசாமிநிர்வாகிகளிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், வரும் 6-ம் தேதி நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மாநாட்டில் விஜய் பேசியஅம்சங்கள், அவர் அறிவித்த ஆட்சி, அதிகாரத்தில் கூட்டணிகட்சிகளுக்கு பங்கு, விஜய் கட்சியுடன் 2026 தேர்தலில்கூட்டணி வைக்கலாமா என்பனகுறித்து ஆலோசிக்க இருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT