Published : 01 Nov 2024 01:00 PM
Last Updated : 01 Nov 2024 01:00 PM

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் தாயகம் திரும்பினர்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர். 

ராமேசுவரம்: இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் தாயகம் திரும்பினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடலுக்குச் சென்ற கலைவாணன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகிலிருந்த கே.ரமேஷ்(27), ஆர்.ஜானகிராமன்(27), டி.கிருஷ்ணன்(68), குமார்(40), உ.ரமேஷ்(51), ராஜ்(55) ஆகிய 06 மீனவர்கள் அக்.9-ம் தேதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அக். 25 ஊர்காவல்துறை நீதிமன்றம் விசைப்படகு ஓட்டுநரான கே.ரமேஷ் என்பவருக்கு இலங்கை ரூ. 40 லட்சம் அபராதம் (இந்திய மதிப்பில் ரூ. 11,50,000) விதித்தும், அபராதத்தை கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும், மேலும் 5 மீனவர்களுக்கு மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டது.

விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து மீனவர்கள் தனி வாகனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x