Published : 29 Oct 2024 12:44 PM
Last Updated : 29 Oct 2024 12:44 PM
சென்னை: தீபாவளியை முன்னிட்டு நேற்று இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் வாயிலாக சென்னையில் இருந்து 1.10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று முதல் தொடங்கியது.
சென்னையைப் பொருத்தவரை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயங்குகின்றன. முதல் நாளான நேற்று நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும் 369 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இவ்வாறு இயக்கப்பட்ட 2,461 பேருந்துகளில் 1 லட்சத்து 10,475 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும், தீபாவளிப் பண்டிகைக்கு வெளியூர்களுக்குச் செல்வதற்காக இதுவரை 1,43,862 பயணிகள் முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT