Published : 06 Jun 2018 11:18 AM
Last Updated : 06 Jun 2018 11:18 AM

பாழடைந்து கூடாரங்களாக மாறி வரும் பறக்கும் ரயில் நிலையங்கள் புத்துயிர் பெறுமா?: அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பதால் பயணிகள் அவதி

சென்னை கடற்கரை – வேளச் சேரி இடையே அமைக்கப்பட்டுள்ள பறக்கும் ரயில் நிலையங் கள் பாழடைந்து கூடாரங்களாக மாறி வருகின்றன. போதிய அளவில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பதால், பயணிகள் அவதிப்படுகின் றனர்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை யில் பறக்கும் ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை மூன்று கட்டங்களாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 1971-ம் ஆண்டு தீர்மானித்தது. முதல் கட்டமாக சென்னை கடற்கரை – மயிலாப்பூர், 2-வது கட்டமாக மயிலாப்பூர் – வேளச்சேரி இடையே பணிகள் முடிக்கப்பட்டு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

167 தூண்களுடன் ரயில்பாதை

தற்போது, சென்னை கடற்கரை – வேளச்சேரி வரை தினமும் 150 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். வேளச் சேரி - பரங்கிமலை பகுதிகளை இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப்பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. மொத்தமுள்ள 5 கி.மீட்டரில் 4.5 கி.மீ. தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப் படுத்துவதில் அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது.

உடைந்த மேற்கூரை

இந்நிலையில், பறக்கும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு போதிய அளவில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. குறிப்பாக, ரயில் நிலையங்களில் உடைந்த மேற்கூரை, மின்விளக்கு எரிவதில்லை, கழிப்பறை வசதி இல்லை, சில இடங்களில் இருந்து பறக்கும் ரயில் நிலையங்களுக்கு இன்னும் பேருந்து வசதி இணைக்கப் படாமல் இருக்கின்றன. இதனால், பயணிகள் அவதிப்படுவதுடன், புதிய பயணிகளும் இந்த தடத் தில் பயணம் செய்ய போதிய ஆர் வம் காட்டாமல் இருக்கின்றனர்.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி, திருவான்மியூர் போன்ற முக்கியமான இடங்களில் பறக்கும் ரயில் நிலையங்களின் கீழ் தளப் பகுதிகள் காலியாக உள்ளன.

ரயில் நிலையங்களின் மேற் கூரைகளும் சேதமடைந்துள்ளன. தூய்மையாக இல்லாமல் இருக்கிறது, குப்பைகள் சிதறிக் கிடக்கின்றன, இரவு நேரங்களில் போதிய அளவில் மின்விளக்குகளும் எரிவதில்லை.

காலியாகவுள்ள இடங்களில் குறைந்த விலையில் வாடகைக்கு விடலாம். இதனால், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்கி வேலைவாய்ப்பு அளிக்க முடியும். தெற்கு ரயில்வேக்கும் வருமானம் கிடைக்கும். எனவே, பறக்கும் ரயில்நிலையங்களைச் சீரமைக்க ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் அதிகாரப்பூர்மாக எடுக்கப்படவில்லை.

இருப்பினும், பயணிகள் வசதிகளைக் கருத்தில் கொண்டு பறக்கும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, உணவகங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளைச் செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்த பிறகு, இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.’’

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x