Published : 28 Oct 2024 01:05 AM
Last Updated : 28 Oct 2024 01:05 AM
சென்னை: "தமிழ்நாடு 2030-0 ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதா ரத்தை அடைவதை இலக்காகக் கொண்டு பயணித்து வருகிறது. இந்த இலக்கை எட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்தெடுப்பது அவசியம்" என்று கிஸ்புளோ நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுரேஷ் சம்பந்தம் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இளம் ஸ்டார்ட்அப் தொழில்முனை வோர்களுக்கு, மார்க்கெட்டிங், பிராண் டிங், நிதி திரட்டுதல் உள்ளிட்டவை சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் சுரேஷ் சம்பந்தம் 'ஐடியா பட்டறை' என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சிறந்த வற்றுக்கு நிதியும் வழங்குகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஐடியா பட்டறை நிகழ்வில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் ஐடியாக்களை முன்வைத்தன. இந்நிகழ்ச்சி குறித்து அவர் கூறுகையில், 1 டிரில்லியன் டாலர் இலக்கை எட்ட தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வளர்த்தெடுப்பது அவசியம் 40 ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவில் சிலிக்கான் வேலியில் வலுவான ஸ்டார்ட்அப் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எப்படித் தொடங்குவது, அவற்றை எப்படி வளர்த்தெடுப்பது என்பது குறித்து சொல்லித் தரப்பட்டது. அதன் விளைவாக, அங்கிருந்து கூகுள், அமேசான், பே பால் என உலகின் முக்கியமான நிறுவனங்கள் உருவாகி வந்தன. அதேபோலான ஒரு கட்டமைப்பை தமிழ்நாட்டில் நாம் உருவாக்க வேண்டும். நம் நிறுவனங்களை சர்வ தேச பிராண்டுகளாக வளர்த்தெடுக்க வேண்டும். இதை இலக்காக் கொண்டு ஐடியா பட்டறை நிகழ்வை ஒருங்கிணைத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT