Last Updated : 08 Jun, 2018 09:35 AM

 

Published : 08 Jun 2018 09:35 AM
Last Updated : 08 Jun 2018 09:35 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 1,090 பேர்: புள்ளிவிவரக் கணக்கெடுப்பில் தகவல்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஏப். 17 முதல் மே 25 வரை பள்ளி செல்லாக் குழந்தை கள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் 1,090 பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் தெரி வித்ததாவது: இம்மாவட்டத்தில், பூவிருந்தவல்லி, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில், வறுமை, பெற்றோரின் புலம்பெயர்தல்,ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால் பள்ளிக்கு செக்கும் வயதுள்ள குழந்தைகள் பலர், பள்ளிக்குச் செல்லாமல் இருப் பது வழக்கமாக உள்ளது. இக் குழந்தைகளைக் கணக்கெடுத்து, அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்வதற்கான நடவடிக்கைகள் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் எடுக்கப்படுகிறது.

அந்த வகையில், இம்மாவட்டத்தில் திருவள்ளூர், சோழவரம், எல்லாபுரம் உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களில், பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் 17 முதல் மே 25 வரை நடந்தது. இக்கணக் கெடுப்பில், 655 ஆண் குழந்தைகள், 435 பெண் குழந்தைகள் என, 1,090 பள்ளி செல்லாக் குழந்தை கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டனர். அவர்களில், 1,057 பேர் பள்ளிக்கு சென்று விட்டு பாதியில் நின்றவர்கள். 33 பேர் இதுவரை பள்ளிக்கே செல்லாதவர்கள்.

இப்பட்டியலில், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 202 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்ததொழிலாளர்களின் குழந்தைகள் 56 பேரும் அடங்கியுள்ளனர். இந்த 1,090 குழந்தைகளை, மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் செயல்படும் 33 சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் திருவள்ளூர், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பயிற்சி மையங்கள், மீஞ்சூர் - திருவெள்ளவாயல், திருவாலங்காடு - காவேரிராஜபுரம் ஆகிய இடங்களில் உள்ள 2 உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த வகையில், 90 சதவீத குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 சதவீத குழந்தைகளும் விரைவில் சேர்க்கப் படுவார்கள். சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x