Published : 25 Oct 2024 05:18 PM
Last Updated : 25 Oct 2024 05:18 PM
கோவை: கோவை மெட்ரோ திட்ட பணிக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் இன்று (அக்.25) எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டியது அவசியமாகும். இத்திட்டத்துக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று ஆய்வு அறிக்கை ஆவணங்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்ப்பிக்காததே காரணம் என்ற உண்மை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. கோவை நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு விரைவில் ஆவணங்களை சமர்ப்பித்து மெட்ரோ திட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT