Published : 23 Oct 2024 09:43 PM
Last Updated : 23 Oct 2024 09:43 PM
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே துரியப்பட்டிமேடு என்ற இடத்தில் எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரியும், வெள்ளாளப்பட்டி என்ற இடத்தில் எம்ஐடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், வேளாண் கல்லூரியும் இயங்கி வருகின்றன.
சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளை பெயரில் இயங்கி வரும் இந்த கல்வி நிறுவனங்களில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி வருமான வரி துணை ஆணையர் பாலா தலைமையில் சென்னை, திருச்சியைச் சேர்ந்த வருமான வரித்துறை அலுவலர்கள் 8 பேர் நேற்று முன்தினத்திலிருந்து இந்த கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கல்வி நிறுவனங்களில் உள்ள ஆவணங்கள், கணினிகளில் உள்ள தரவுகள் ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். வருமானவரித்துறை சோதனை நடைபெற்றாலும் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போலவே இயங்கி வருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களை சேலத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT