Published : 21 Oct 2024 05:35 AM
Last Updated : 21 Oct 2024 05:35 AM

டிஜிபி அலுவலகத்தில் வீரவணக்க நாள் நிகழ்வுகள்: மெரினாவில் இன்று காலை போக்குவரத்து மாற்றம்

சென்னை: டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்வுகள் நடைபெறுவதால், மெரினா பகுதியில் இன்று காலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் இன்று (அக்.21) அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, சென்னை மெரினா டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் தலைமை டிஜிபி சங்கர் ஜிவால், காவல் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றனர். அணிவகுப்பு மரியாதையும் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக, மெரினாவில் இன்று காலை 8 முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் காரணீஸ்வரர் கோயில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காரணீஸ்வரர் பக்கோடா தெரு, அம்பேத்கர் பாலம், நடேசன் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். எதிர்திசையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

மயிலாப்பூரில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் ‘21G’ பேருந்து, ராயப்பேட்டை 1 பாயின்ட், மியூசிக் அகாடமி பாயின்ட், டிடிகே சாலை, இந்தியன் வங்கி சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பாயின்ட், அண்ணா சாலை வழியாக செல்லலாம்.

கதீட்ரல் ரோடு பகுதியில் இருந்து லைட் ஹவுஸ் நோக்கி வரும் ‘27D’ பேருந்து, வி.எம்.தெருவில் திருப்பிவிடப்பட்டு, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, பக்தவத்சலம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி.ராமசாமி சாலை, சீனிவாசன் தெரு, ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்லலாம். காமராஜர் சாலையில் (நேப்பியர் பாலம் முதல் லைட் ஹவுஸ் வரை) வர்த்தக, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x