Published : 19 Oct 2024 05:46 AM
Last Updated : 19 Oct 2024 05:46 AM
சென்னை: தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திக்கு மட்டும் விழா எடுத்தால் அது நாட்டின் பன்முகத்தன்மையை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நாடு முழுவதும் இந்திமாதம் என்ற ஒன்றை மத்திய அரசுகொண்டாடி வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை தொலைக் காட்சி நிலையத்தில் இந்தி மாத கொண்டாட்டங்களில் நிறைவு விழாநடைபெற்றிருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மத்திய அரசு முன்னெடுப்பது ஏற்கக்கூடியதல்ல.
‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினார். தொட்டதற்கெல்லாம் அவரைக் குறிப்பிடும் இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் நாட்டில் ‘எங்கெங்கு காணினும் இந்தியடா’ என்று பாடிக்கொண்டிருப்பது கண் டனத்துக்குரியது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்தப்பட்டது. உலகின் மூத்த மொழியானதமிழ் பேசப்படும் மாநிலத்தில் இந்திக்கு மட்டும் விழா எடுக்கப்பட்டால் அது பிற மொழிகளை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானது. இது நாட்டின் பன்முகத்தன்மையை பாதிக்கும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், பாஜக ஆட்சி செய்தாலும் இந்தியைத் திணிப்பதில் மட்டும் வேறுபாடு காட்டுவதில்லை. இந்தஅப்பட்டமான இந்தித் திணிப்புமுயற்சி கடுமையாக கண்டிக் கத்தக்கது.
விசிக தலைவர் திருமாவளவன்: தூர்தர்ஷன் தொலைக்காட்சி யில் தொடர்ந்து ஒருவார காலமாக இந்தி மாத கொண்டாட்டம் ஒளிபரப்பாகியிருப்பது அதிர்ச்சியளிக் கிறது. தேசிய கல்விக் கொள்கை யின் மூலம் தாய் மொழியையும் கற்கலாம். அதே வேளையில் இந்தியையும் கற்க வேண்டும் என்கிறநிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ள நிலையில், அதை இப்போதுதூர்தர்ஷன் மூலமாகவும் நடை முறைப்படுத்த முயற்சிக்கிறது. இந்த இந்தி திணிப்பு முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கும் தமிழகத்தில் இந்த விழாவை நடத்துவதும், அதில் ஆளுநர் பங்கேற்று இருப்பதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மொழிகள் பேசும் இந்திய நாட்டில் இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், இந்தி பேசாத மாநிலத்தில் இந்தி மாதம் கொண்டாடப் படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்தி மொழி பேசாதமாநிலங்களில் இந்தி மொழி கொண்டாட்ட நிகழ்வுகளை இனி வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT