Published : 19 Oct 2024 06:10 AM
Last Updated : 19 Oct 2024 06:10 AM

திமுக அரசின் தலையீட்டால் மனித உரிமை ஆணைய செயல்பாடு பாதிக்கும்: பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: திமுக அரசின் தலையீட்டால் மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகள் பாதிக்கும் நிலைஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் காவல் ஆய்வாளர் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சிப் பிரமுகர் மற்றும் ஒருவரை சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந் தது.

இந்தப் புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு ஆணையத்தின் டிஎஸ்பிக்கு மாநிலமனித உரிமை ஆணையத் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான மணிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சீஸிங்ராஜா ஆகிய மூவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்தும் விசாரிக்க அதே டிஎஸ்பி நியமிக்கப்பட்டார். இரு நேர்வுகளிலும் விசாரணையை முடித்து ஆணையத்துக்கு அவர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில், எந்தவித காரணமும் இல்லாமல் அந்த டிஎஸ்பியை மயிலாடுதுறை மாவட்ட மது விலக்குப் பிரிவுக்கு திமுக அரசு பணி மாறுதல் செய்துள்ளது. இந்த நிகழ்வு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

ஒருவேளை அரசுக்கு எதிராக டிஎஸ்பி ஏதாவது அறிக்கை தாக்கல் செய்திருப்பாரோ என்று சந்தேகமும் ஏற்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், திமுக அரசால் ஆணையத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளரை, மாநில மனித உரிமை ஆணையத்தில் பொறுப்பேற்க விடாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

தன்னாட்சி அமைப்பான மாநிலமனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில் லாமல் மூக்கை நுழைத்து, ஆணை யத்தின் உரிமைகள் பறிக்கும் செயலில் ஈடுபடும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

காவல் துறையினர், தங்களு டைய ஏவல் துறையினராக மட்டுமேசெயல்பட வேண்டும் என்ற இந்த ஆட்சியாளர்களின் எண்ணம் ஏற்கத்தக்கதல்ல. இதற்கொரு விடிவு காலத்தை தமிழக மக்கள் விரைவில் ஏற்படுத்துவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x