Published : 12 Aug 2014 10:00 AM
Last Updated : 12 Aug 2014 10:00 AM

விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தால் ரூ.32 கோடி வருவாய் இழப்பு: பேரவையில் அறிக்கை தாக்கல்

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்கு மாடி கட்டிடத்தால், அரசுக்கு ரூ.32 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டப்பேரவை யில் தாக்கல் செய்யப்பட்ட சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் ஆண்டுக் கணக்குத் தணிக்கை அறிக்கையில் (2011-2012) தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு 16 மாடிக் கட்டிடம் கட்டிய நிறுவனத்துக்கு விற்கப்பட்ட நிலப்பரப்பளவு 16,648.81 ச.மீ. ஆகும். பட்டாவின் படி அந்நிறுவனத்தின் பெயரில் 16,648.81 ச.மீ. இடம் உள்ளது. 1987-ல் முந்தைய திட்ட அனுமதியின்போது, சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட திறந்தவெளி நிலப்பரப்பான 1,254 ச.மீ. மீது அந்நிறுவனத்துக்கு சட்டப்படி உரிமை இல்லை. பட்டா நிலத்தின் உண்மை நிலை, பதிவு செய்யப்பட்ட ஆவணம் 3-ன்படியும் 16,648.81 ச.மீ. பரப்பளவே உள்ளது. எனவே 16648.81 ச.மீ. என்ற பரப்பளவைக் கருத்தில் கொண்டே கவரேஜ் மற்றும் தரைத்தளப் பரப்பு (எப்எஸ்ஐ- அதாவது மனைப்பரப்புக்கு ஏற்ப கட்டிடத்தின் அதிகபட்ச உயர அளவு) கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்படி வளர்ச்சி விதிமுறைளுக்கு மாறாக 1,254 ச.மீட்டரையும் சேர்த்து, பரப்பளவால் மொத்தத் தரைப்பரப்பளவு 2.5 சதவீதம் எனவும் அதன் அடிப்படையில் கவரேஜ் 29.01 சதவீதம் என்றும் தகுதியான எப்எஸ்ஐ 2.5 சதவீதம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால், வளர்ச்சி விதிகளின்படி விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய தகுதியுள்ள பரப்பளவான 16,648.81 ச.மீ., கவரேஜ் 31.20 சதவீதம் மற்றும் எப்எஸ்ஐ 2.25 ஆகும். எனவே, வளர்ச்சி பெற உரிமையற்ற 1,254 ச.மீ. சேர்த்து கணக்கிடப்பட்டதால் கவரேஜ் மற்றும் எப்எஸ்ஐ அளவுகள் மாறியுள்ளன.

இத்திட்ட அனுமதியைப் பொருத்த வரையில், 3.15 எப்எஸ்ஐ-தான் வழங்கப்பட் டிருக்க வேண்டும். மாறாக, 3.71 எப்எஸ்ஐ வழங்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.32.34 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு விதிகளை மீறி வழங்கப்பட்ட ஊக்க தரைப்பரப்பளவு குறியீடுக்கு அரசின் அனுமதி பெறப்படவேண்டும்.

எனவே மிகுதியாக வழங்கப்பட்ட ஊக்க எப்எஸ்ஐ முறைப்படுத்தி, இழப்பை ஈடுகட்ட கட்டிட உரிமையாளரிடமிருந்து வசூல் செய்து அரசுக் கணக்கில் ரூ.32.34 கோடி செலுத்தவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x