Published : 17 Oct 2024 12:46 PM
Last Updated : 17 Oct 2024 12:46 PM
சென்னை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், வலிவுடனும், எடுத்த செயலில் எல்லாம் வெற்றியுடனும் திகழ விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
யார் இந்த பகவந்த் மான்? - தனது கல்லூரி பருவத்தில் இருந்தே ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை மேம்படுத்தி கொண்ட பகவந்த் மான், நிறைய கல்லூரி நிகழ்வுகளில் காமெடி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். நாளைடைவில் அதுவே அவரை டெலிவிஷன் நிகழ்ச்சிகள் வரை கொண்டு சென்றது. பகவந்த்தின் தனிச் சிறப்பு அவரின் அரசியல் நையாண்டி. பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலின் நடப்பு நிகழ்வுகளை காமெடி கன்டென்ட்டாக மாற்றி மக்கள் முன்னிலையில் நடித்து காண்பிப்பார்.
இந்த பாணி அவரை மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது. சில பட வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்தது. இப்படி புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்தாலும், அரசியல் என்ட்ரி கொடுத்த பிறகு அவர் காமெடியன் பட்டத்தை துறந்து முழு நேர அரசியல்வாதியாக மாறினார். ஆம் ஆத்மி அவரின் முதல் கட்சி கிடையாது. சரியாக, ஒரு தசாப்ததுக்கு முன்னதாக 2011-ல் மன்பிரீத் சிங் பாதல் தலைமையிலான பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்ததன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT