Last Updated : 16 Oct, 2024 06:22 PM

 

Published : 16 Oct 2024 06:22 PM
Last Updated : 16 Oct 2024 06:22 PM

செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு 

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதகுகளின் உறுதித் தன்மை மற்றும் கதவுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக, பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஏரியின் நிலவரம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியில் தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது, மதகுகள், அதன் கவுதகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது செம்பரம்பாக்கம் ஐந்து கண் மற்றும் 19 கண் மதகில் இருந்த கதவுகள் இயக்கி காட்டப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஆய்வு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ''ஏரியில் தண்ணீரே இல்லை. அதற்குள் பீதியைக் கிளப்பிவிடுகின்றனர்'' என்று கூறிவிட்டுச் சென்றார் உதயநிதி. இந்த ஆய்வின்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x