Published : 15 Oct 2024 02:55 PM
Last Updated : 15 Oct 2024 02:55 PM

சென்னை கனமழை பாதிப்பு: மண்டல வாரியாக ஹெல்ப்லைன் எண்கள் விவரம்

சென்னை - வடபழனி 100 அடி சாலையில் சூழ்ந்த மழை வெள்ளம் | படம்: எம்.வேதன்

சென்னை: சென்னையில் கனமழை பாதிப்பு தொடர்பாக தொடர்புகொள்ள 15 மண்டலங்களுக்கும் அவசர கால தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் 9445190102 என்ற எண்ணில் தொடர்பு அலுவலர் பாபுவை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். மணலி மண்டலத்தின் தொடர்பு அலுவலர் கோவிந்தராசுவை 9445190002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மாதவரம் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் திருமுருகனை 9445190003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தண்டையார்பேட்டை மண்டலத்தின் தொடர்பு அலுவலர் சரவணமூர்த்தியை 9445190004 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ராயபுரம் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் பரிதாபானுவை 9445190005 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருவிக நகர் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் முருகனை 9445190006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அம்பத்தூர் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் தமிழ்ச்செல்வனை 9445190007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அண்ணாநகர் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் சுரேஷை 9445190008 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேனாம்பேட்டை மண்டலத்தின் தொடர்பு அலுவலர் முருகதாஸை 9445190009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கோடம்பாக்கம் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் முருகேசனை 9445190010 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வளசரவாக்கம் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் உமாபதியை 9445190011 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆலந்தூர் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் பி.எஸ். சீனிவாசனை 9445190012 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அடையாறு மண்டலத்தின் தொடர்பு அலுவலர் பி.வி. சீனிவாசனை 9445190013 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பெருங்குடி மண்டலத்தின் தொடர்பு அலுவலர் கருணாகரனை 9445190014 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சோழிங்கநல்லூர் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் ராஜசேகரை 9445190015 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவை மட்டுமின்றி சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து விதமான முறையீடுகளுக்கும் 1913 என்ற டோல்-ஃப்ரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சி போக்குவரத்து தொடர்பான புகார்களுக்கு சென்னையின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் எனில், 044-23452362 என்ற எண்ணிலும், சென்னை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் எனில் 044-23452330 என்ற போக்குவரத்து காவல்துறை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவை மட்டுமின்றி 9003130103 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம்.

சென்னை காவல்துறையை 100 என்ற அவசர எண்ணிலும், பெண்களுக்கான உதவி எண் 1091/181-லும் தொடர்பு கொள்ளலாம். மின்சார வாரியத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பாம்புகளை பிடிக்க வேண்டுமானால் வனத்துறையின் 044-22200335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சென்னைக்கு 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட்! - இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன முதல் மிக கனமழை தொடரும் என்றும், சில பகுதிகளில் அதி கனமழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் எச்சரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x