Published : 15 Oct 2024 10:43 AM
Last Updated : 15 Oct 2024 10:43 AM

கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர், மாணவர்களின் பாதுகாப்பு கருதியே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அப்படியிருந்தும் சிபிஎஸ்இ பள்ளிகள், சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதாகத் தகவல் வருகிறது. பெற்றோரும் ஆன்லைன் வகுப்புகளை விரும்புவதாக பள்ளிகள் தெரிவிக்கின்றன. ஆனால் மழை, பலத்த காற்று காரணமாக தொழில்நுட்ப சவால்கள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் நாங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்கும்படி வலியுறுத்துகிறோம்.

அதேபோல் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முந்தைய நாளே தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x