Published : 15 Oct 2024 06:15 AM
Last Updated : 15 Oct 2024 06:15 AM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்து இயக்கம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

பெரம்பலூர்: தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகளை ஒப்பந்தஅடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அக். 24-ம் தேதி ஆம்னி பேருந்துஉரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், பண்டிகைக் காலங்களில் கூடுதல்கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படும். இதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிப்பவர்களை அரசால்எதுவும் செய்ய முடியாது. அதுகுறித்து புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் பலர் புதிதாக ஆம்னி பேருந்துகளை வாங்கிஇயக்குகின்றனர். அவர்கள் அரசின்நடைமுறைகள் தெரியாமல் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.அவர்கள் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

விழாக் காலங்களில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையின்போது சோதனை அடிப்படையில் இந்த நடைமுறைசெயல்படுத்தப்பட்டது. அதில்,எந்தவித சிரமமும் ஏற்படவில்லை.எனவே தீபாவளி பண்டிகையின் போது, ஒப்பந்த அடிப்படையில் போதிய அளவு தனியார் பேருந் துகள் இயக்கப்படும்.

வழக்கமாக தமிழகத்தில் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. திருவிழா காலங்களில் கூடுதலாக 5 ஆயிரம் பேருந்துகள் இயக்க வேண்டும் என்றால், அதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகம்பேருந்துகளை வாங்கி வெறுமனே நிறுத்தி வைத்திருக்க முடியாது.

அதுபோன்ற நாட்களில் கூடுதலாக ஊழியர்களையும் நியமிக்க முடியாது. அதனால் தான், இடைக்கால ஏற்பாடாக தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில், அந்தந்த வழித் தடங்களில் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x