Published : 14 Oct 2024 12:52 PM
Last Updated : 14 Oct 2024 12:52 PM
விழுப்புரம்: பழங்குடி ஊராட்சி தலைவரை சாதியை சொல்லி வன்கொடுமை செய்தவர்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
செஞ்சி அருகே ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவராக சங்கீதா உள்ளார். இவர் கடந்த 2ம் தேதி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் எதிரே அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் விசாரித்தனர்.அப்போது, பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த தன்னை ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் உட்பட 4 பேர் உட்பட 4 பேர் சாதியை சொல்லி வன்கொடுமை செய்வதாக கூறி செப்டம்பர் 1 ம் தேதி செஞ்சி போலீஸில் புகார் அளித்திருப்பதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி செந்தில்குமார் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சித்ரா, அவரது கணவர் குணசேகர்.2 வது வார்டு உறுப்பினர் சுதா, அவரது கணவர் சரவணன் ஆகிய 4 பேர்மீது வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே நேற்று தைலாபுரம் தோட்டத்தில் ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை சந்தித்து நடந்தவற்றை விவரித்தார்.
இதனை தொடர்ந்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனைக்கு பிறகும் கூட சங்கீதாவுக்கு முழுமையான நீதி கிடைக்கவில்லை. அவர் மீது சாதிய வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விட்ட ஊராட்சித் துணைத் தலைவர் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டப் போராட்டம் மற்றும் அரசியல் போராட்டத்தின் மூலம் தான் சங்கீதாவுக்கு முழுமையான நீதி கிடைக்கும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகவே இருக்கிறதா” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT