Last Updated : 14 Oct, 2024 11:29 AM

5  

Published : 14 Oct 2024 11:29 AM
Last Updated : 14 Oct 2024 11:29 AM

தமிழக வெற்றிக் கழகமும் காலில் விழும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறதா?

கட்சி நிர்வாகிகள் காலில் விழுவதை அனுமதிக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி சாலையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுப் பணிகளை மேற்பார்வை செய்து வரும் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகள் அவரின் காலில் விழுந்து வணங்குகிறார்கள். இதன் மூலம் வழக்கமான அரசியல் கட்சிக்கான பாதையை நோக்கி தமிழக வெற்றிக்கழகமும் பயணிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27 ம் தேதி அன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநில மாநாடு நடைபெறஉள்ளது. அண்மையில் இம் மாநாட்டுக்கு பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தினை சமன்படுத்தி அப்பகுதியில் உள்ள 6 கிணறுகளுக்கு தொண்டர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணியும்,மேடை அமைக்க அடித்தள பைப்புகள் நடும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாநாட்டுப் பணிகளை மேற்பார்வை செய்து வரும் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகள் அவரின் காலில் விழுவதை போல இடுப்பை வளைத்து குனிந்து வணங்குகிறார்கள். இதை தடுக்கக்கூட புஸ்ஸி ஆனந்த் முயலாதது தெள்ள தெளிவாக தெரிவதன் மூலம் வழக்கமான அரசியல் கட்சிக்கான பாதையை நோக்கி தமிழக வெற்றிக்கழகமும் பயணிக்கிறது என்ற கேள்வியை எழுப்பும்விதமாக உள்ளது.

கவனம் ஈர்த்த விஜய்! பொதுவாக தலைவர் பிறந்தநாளுக்கு அவரின் சிலைக்கு மாலையிட வருகை தரும் கட்சித் தலைவர்கள் மாலையோடு காத்திருக்கும் நிர்வாகியிடமிருந்து மாலையை வாங்கி சிலைக்கு அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவதே வழக்கம்.

ஆனால், தமிழக வெற்றுக் கழகத்தின் தலைவர் விஜய் தந்தை பெரியார் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்க தன் கையில் மாலையையும், மற்றொரு கையில் சிலையில் தூவ உதிரிபூக்களை தட்டில் வைத்து கொண்டு சென்று எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x