Published : 18 Jun 2018 09:09 AM
Last Updated : 18 Jun 2018 09:09 AM

மழைநீர் சேகரிப்பு உறை கிணறுகளை அமைக்க வேண்டும்

சென்னையில் மழைநீர் வடிகால் கள் அமைப்பதற்கு பதிலாக மழைநீர் சேகரிப்பு உறை கிணறுகளை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு குடியிருப் போர் நலச்சங்கங்கள் சென்னை மாநகராட்சியிடம் முறையிட்டுள்ளன.

சென்னை மாநகரில் 1,900 கிமீ நீளத்துக்கு மேல் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் அவற்றை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்துக்காக பல நூறு கோடி ரூபாய்களை மாநகராட்சி நிர்வாகம் செலவிட்டு வருகிறது.

இந்த மழைநீர் வடிகால்கள் அமைப்பதற்கு பதிலாக மழைநீர் சேகரிப்பு கிணறுகளை அமைக்க வலியுறுத்தி ராஜா அண்ணாமலைபுரம், தியாகராய நகர், மயிலாப்பூர், திருவான்மியூர் ஆகிய குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் ஸ்வரன் அமைப்பு ஆகியவை இணைந்து, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அண்மையில் முறையிட்டுள்ளன.

கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு

இதுதொடர்பாக தியாகராய நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த வி.எஸ்.ஜெயராமன் கூறியதாவது:

``மழைநீர் வடிகால் பணிகளுக் காக தோண்டப்படும் பள்ளங்களால் வீட்டு கட்டுமானம் பலவீனமடைந்து சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. மாதக் கணக்கில் வீடுகளுக்குச் செல்ல முடியவில்லை. குடிநீர், கழிவுநீர் இணைப்புகளும் துண்டிக்கப்படுகின்றன.

இத்திட்டத்தால் பொதுமக்களுக்கு சிரமங்களே அதிகம். நிலத்துக்கடியில் மழைநீர் சேகரமா வது பாதிக்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். மாற்று ஏற்பாடாக சாலையோரங்களில் மழைநீர் சேகரிப்புக் கிணறுகளை அமைக்க வேண்டும்” என்றார்.

மயிலாப்பூர் மக்கள் நலச்சங்க செயலர் கே.விஸ்வநாதன் கூறிய தாவது:``மழைநீர் வடிகாலில் மாநகராட்சி நிர்வாகம் முறையாக தூர் வாருவதில்லை. அதனால் மழை நீர் முறையாக வழிந்தோடுவதில்லை. சாலையிலேயே தேங்குகிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகாலில் கழிவு நீர் தேங்குவதால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. மழைநீர் சேகரிப்புக் கிணறுகளை அமைத்தால், கழிவுநீரை விட முடி யாது. கொசுத்தொல்லை ஒழியும்.

நிதி மிச்சமாகும்

மழைக் காலங்களில் சாலை யில் மழைநீர் தேங்காமல் மழை நீர் சேகரிப்பு கிணறுகளுக்குச் சென்றுவிடும். பெருமளவு நிதி யும் மாநகராட்சிக்கு மிச்சமாகும். எனவே மழைநீர் வடிகால் அமைப்பதை கைவிட்டு, சாலையோரங்கள் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கிணறுகளை அமைக்க வேண்டும்” என்றார்.

மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் மேம்பாடு தொடர் பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ‘ஸ்வரன்’ அமைப்பைச் சேர்ந்த என்.ராம்சங்கர் கூறியதா வது:``மழைநீர் சேகரிப்பு வல்லுநரும் ரெயின் சென்டர் அமைப்பின் இயக்குநருமான சேகர் ராகவனுடன் கலந்தாலோசித்து மழை நீர் சேகரிப்பு உறை கிணறு அமைக்கும் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த கிணறுகளைச் சாலையோரங்க ளில் அமைத்து, அதில் மழைநீரை விட்டு நிலத்தடி நீரை மேம்படுத்துவதுதான் திட்டத்தின் நோக்கம்.

அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்பட்டால் மழைநீர் வீடுகளில் இருந்து தெருவுக்கு வருவது குறைந்துவிடும். தெருவில் உள்ள மழைநீர், மழைநீர் சேகரிப்பு கிணறுகளில் சேகரமாகி நிலத்தடிநீர் மேம்படும். இதனால் சாலைகளில் வெள் ளம் ஏற்படுவது தடுக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

எங்கள் கோரிக்கையை ஏற்று தியாகராய நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபாதைகளில் மழைநீர் சேகரிப்பு உறை கிணறுகளை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. அதில் மழை நீர் சிறப்பாக சேகரமாகிறது. அத னால் சென்னை மாநகரத்தில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு பதிலாக மழைநீர் சேகரிப்பு கிணறுகளை அமைக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) எம்.கோவிந்தராவைச் சந்தித்து வலியுறுத்தினோம். அவர் எங்கள் திட்டத்தை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்” என்றார்.

இதுதொடர்பாக மாநகராட்சி துணை ஆணையர் எம்.கோவிந்தராவிடம் கேட்டபோது, “மழைநீர் வடிகாலை முற்றிலுமாக தவிர்த்து, மழைநீர் சேகரிப்பு கிணறுகளை மட்டுமே அமைப்பது என்பது சாத்தியமில்லாதது. சாத்தியம் உள்ள இடங்களில் கிணறு கள் அமைக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x