Published : 12 Oct 2024 05:46 AM
Last Updated : 12 Oct 2024 05:46 AM

கவரைப்பேட்டை ரயில் விபத்து: மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட ரயில்கள்

சென்னை: கவரைப்பேட்டையில் மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெட்டிகளில் தீ பிடித்தது.

வெள்ளிக்கிழமை (அக்.11) இரவு 8.27 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மீட்பு பணிகள் தற்போது அங்கு நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டது. உயிரிழப்பு ஏதும் இந்த விபத்தில் ஏற்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தையடுத்து, இரு மார்க்கமாகவும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 8 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டும், 2 ரயில்களை ரத்து செய்தும் உள்ளது தெற்கு ரயில்வே.

மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட ரயில்கள்: கன்னியாகுமரி - நிசாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் - 12641, சென்னை சென்ட்ரல் - லக்னோ சந்திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் - 16093, சென்னை சென்ட்ரல் - நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் - 12611, ஹவுராவுக்கு புறப்பட்ட சென்னை சென்ட்ரல் மெயில் - 12839, அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ் - 12655, பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் - 22644, புது டெல்லி - சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் - 12616, காக்கிநாடா துறைமுகம் - செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் - 17644 ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் - விஜயவாடா செல்லும், சென்ட்ரல் - விஜயவாடா வரும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் - 12077 மற்றும் 12076 ரத்து செய்யப்பட்டுள்ளது.

மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் விபத்து நடைபெற்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே நிர்வாகத்தினர், ரயில்வே போலீஸார், காவல் துறை, மாநில அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் தங்குவதற்கான ஏற்பாடுகள், உணவு மற்றும் மாற்று போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இன்று (அக்.12) முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: திருப்பதி - புதுச்சேரி மெமு ரயில் - 16111, புதுச்சேரி - திருப்பதி மெமு ரயில் 16112, சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் - 16203, 16053, 16057, திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் - 16204, 16054, 16058, அரக்கோணம் - புதுச்சேரி மெமு ரயில், கடப்பா - அரக்கோணம் மெமு ரயில், சென்னை சென்ட்ரல் - திருப்பதி மெமு, திருப்பதி - சென்னை சென்ட்ரல் மெமு ரயில், அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில், திருப்பதி - அரக்கோணம் மெமு ரயில், விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ், சூலூர்பேட்டை - நெல்லூர் மெமு எக்ஸ்பிரஸ், நெல்லூர் - சூலூர்பேட்டை மெமு எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x