Published : 07 Oct 2024 08:08 AM
Last Updated : 07 Oct 2024 08:08 AM

தமிழுக்கு பெருமை சேர்த்த விமானப் படை சாகச நிகழ்ச்சி!

சென்னை: சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு அழகான தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டன. இதன் மூலம் தமிழுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஒவ்வொரு சாகச நிகழ்ச்சிக்கும் அழகான தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டன. இதன்படி, சங்கம், சேரன், சோழன், பல்லவர், காவேரி,காஞ்சி, நட்ராஜ் ஆகிய தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டன. அத்துடன், ஒவ்வொரு சாகச நிகழ்ச்சியின் போதும் திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டு பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

குறிப்பாக, தேஜஸ் விமான சாகச நிகழ்ச்சியின் போது கபாலி திரைப்படத்தில் இடம் பெற்ற 'நெருப்புடா' என்ற பாடல் இசைக்கப்பட்டது. சாகச நிகழ்ச்சியை சென்னையை சேர்ந்த விமானப் படை அதிகாரி கார்த்திக் தனது மனைவியுடன் தூய தமிழில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர்களது வர்ணனை பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைத்தது.

கூடவே, தமிழ் திரைப்பட பாடல்களும் ஒலிக்க மக்கள் உற்சாகத்தில் மிதந்தனர். அதேபோல், சாரங் ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சியின்போது ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. தேஜஸ், ரஃபேல் போர் விமானங்கள் தீப்பிழம்புகளை கக்கியபடி வானில் சாகசத்தில் ஈடுபட்டது தீபாவளி பண்டிகையை முன்கூட்டியே கொண்டாடியது போன்று பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அத்துடன், மேலும், சூர்யகிரண் குழுவினர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்லும்போது விமானிகள் தங்களது காக்பிட்டில் இருந்து நன்றி, மீண்டும் சந்திப்போம் எனதமிழில் கூறி விடை பெற்றனர். அதேபோல், டார்னியர் விமானத்தில் இருந்த விமானி தமிழில் பேசியதும் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதேபோல், ஜாகுவார் போர் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம், விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x